வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் மீண்டும் அதன் வேலையைக்காட்ட ஆரம்பித்து விட்டது.
வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் என்றால் என்ன?
2016-ம் ஆண்டு வாட்ஸ்ஆப் கோல்ட் என்ற ஆப் மூலம் பலர் ஏமாற்றப்பட்டனர். இப்போதுள்ள ஜிபி, யோ வாட்ஸ்ஆப் போன்று அதுவும் ஒரு வாட்ஸ்ஆப் கிராக் செயலி.
ஒரே நேர்த்தில் 100 போட்டோ அனுப்ப இயலும். ஒருவருக்கு அனுப்பிய தகவலை 2 அல்லது 3 மணி நேரம் கழித்துக்கூட அழிக்கலாம்.
தீம், எமோஜி, ஸ்டிக்கர் மற்றும் பாண்ட் போன்ற பல்வேறு வசதிகள் இருப்பதாகக்கூறி வைரல் செய்யப்பட்டது.
இதை உண்மை என நம்பிய பலர், அந்த லிங்கை கிளிக்செய்து டவுன்லோட் செய்ய முயன்றனர். ஆனால் அந்த லிங்கில் அப்படி ஒரு செயலி இல்லை.
அந்த லிங்க், ஒரு தீய இணயத்திற்க்குள் சென்றது. Website Riddled with Malware என்ற வைரஸ் கிளிக் செய்தவர்கள் போனில் இன்ஸ்டால் ஆனது.
அந்த வைரஸ் இன்ஸ்டால் ஆனதே பலருக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் போனில் உள்ள தகவல்களைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி ஹக்கர்களுக்கு அனுப்பியுள்ளது.
போனை ரீசெட் அல்லது பார்மெட் செய்தே அந்த வைரசை அழிக்க முடிந்தது. பேராசையால் பலர், தங்கள் அந்தரங்கத் தகவல்களைக்கூட பறிகொடுத்தனர்.
மார்டீநெல்லி வீடியோ
மீண்டும் மார்டீநெல்லி என்ற பெயரில் வாட்ஸ்ஆப் கோல்ட் வைரஸ் உலவுவதாக தகவல் பரவி வருகிறது.
‘மார்டீநெல்லி’ என்ற பெயரில் ஒரு வீடியோ பலரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வந்துள்ளதாம். அதைக் கிளிக் செய்தால், அது உங்கள் ஃபோனை ஹேக் செய்துவிடுமாம்.
அதன்பிறகு உங்கள் ஃபோனை, யாராலும், சரிசெய்ய இயலாது எனக்கூறி அப்படி ஒரு வீடியோ பரப்பப்பட்டு வருகின்றது.
சொபோஸ் ஆன்டி வைரஸ் நிறுவனம் மறுப்பு
சொபோஸ் என்ற ஆன்டி வைரஸ் நிறுவனம் இதை மறுத்துள்ளது. மார்டீநெல்லி என்று ஒரு வீடியோவே இல்லை. அப்படி இருந்தாலும் வீடியோ மூலம் உங்கள் வாட்ஸ்ஆப் தகவலை திருட முடியாது எனக் கூறியுள்ளது.
வாட்ஸ்ஆப் பயனாளர்களை அச்சுறுத்தும் விதமாக புரளி பரப்பப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் காவல்துறையும், அந்த வீடியோ போலி என உறுதி செய்துள்ளனர்.
போலி லிங்குகள் எப்படி பரவுகிறது?
இருப்பினும் வாட்ஸ்ஆப் கோல்ட் பாணியில் பல லிங்குகள் செயல்பட்டுக்கொண்டு தான் உள்ளன. இதை 25 பேருக்கு ஷேர் செய்தால், ஆப்பிள் ஃபோன் பரிசாகக் கிடைக்கும்.
paytm கேஷ்பேக், அமேசான் கூப்பன், இலவச ரீசார்ச் என ஆசை வார்த்தை கூறி போலி லிங்குகளைப் பரப்பி வருகின்றனர்.
அதில், நீங்கள் கொடுக்கும் தகவல்களைக் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்று காசு பார்த்துவிடுவார்கள். உங்களுக்குத் தேவையில்லாத போன் கால்கள் வரத்துவங்கும்.
நிலம் வாங்குறீங்களா? ரத்தினக்கல் வாங்குறீங்களா? அதுஇது எனத் தொல்லை தரும் போன்கள் வரும்.
பணம் திருடும் கும்பல்
சில லிங்குகள் ஒரு ரூபாய்க்கு ஐபோன் எனக்கூறி உங்கள் அக்கவுண்ட் தகவல்களை வாங்கிக்கொண்டு, மொத்த பணத்தையும் உடனே திருடிவிடுவர்.
சிலர் ஆபாச வீடியோ லிங்க் எனக்கூறி உங்கள் தகவல்களைத் திருடுவர். மால்வேர்களை உங்கள் போனிற்கு அனுப்பிவிடுவார்கள்
இவற்றை எப்படித் தடுப்பது?
பொதுவாக இதுபோன்ற லிங்குகள் xxx என துவங்கும். நீங்கள் இதுவரை அறியாத இணையதள லிங்க் எனில் அனுப்பியவரிடம் அதைப்பற்றி முழுமையாக விசாரிக்கவும்.
நீங்கள் உபயோகப்படுத்தும் ப்ரவ்சர் பாதுகாப்பானதாக இருந்தால், உங்களை அந்த தளத்திற்கு அழைத்துச்செல்லாது.
10 பேருக்கு அனுப்பு, 20 பேருக்கு அனுப்பு ஐபோன் இலவசம்! இப்படி ஏதாவது, இலவசம் எனக் கூறினால் அந்த பக்கம் தலைவைத்துக்கூட பார்க்க வேண்டாம்.
பதிலுக்கு அனுப்பியவரை ஆத்திரம்தீர திட்டுங்கள். அப்பொழுதுதான் அந்த நபருக்கும் புத்தி வரும்.
தொடர்ந்து இவ்வாறு யாரவது அனுப்பினால், அவர்களைக் குழுவைவிட்டே ப்ளாக் செய்துவிடுங்கள்.