Home ஆன்மிகம் திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!

திரௌபதி வரலாறு: திரௌபதி யார்? அவள் பிறப்பின் ரகசியம்!

1
2085
திரௌபதி வரலாறு

திரௌபதி வரலாறு: யார் அவள்? பிறப்பின் ரகசியம்! பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தும் கற்புக்கரசி என ஏன் போற்றப்படுகிறாள்? புராண கால திரௌபதி எனும் பாஞ்சாலி.

புராண கால பாஞ்சாலி எனும் திரௌபதி வரலாறு

திரௌபதி கோவில்

மகாபாரதம் என்னும் மிகப்பெரிய காவியத்தில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் கண்டிருப்போம். அதில் பல முக்கியமான நாயகன்களும், நாயகிகளும் அடக்கம்.

அப்படிப்பட்ட காவியத்தில் நாயகியாக விளங்குபவளே “திரௌபதி” என்கிற கற்புக்கரசி பத்தினி தெய்வம். இன்றளவும் கோயில் கட்டி இத்தெய்வத்தை கொண்டாடுகின்றனர்.

அப்படிப்பட்ட அவளின் பிறப்பு மற்றும் ஐவரை மணந்தும் எவ்வாறு கற்புக்கரசி பத்தினி தெய்வமானாள்? யார் அந்த திரௌபதி? திரௌபதி வரலாறு என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.

திரௌபதியின் பிறப்பு:

பத்தினி தெய்வம் பாஞ்சாலி

குரு துரோணாச்சார்யாரின் அறிவுரை படி அர்சுனன் பாஞ்சால தேசத்து மன்னன் துருபதனை வீழ்த்தி பாதி ராஜ்யத்தை கைப்பற்றுகிறான்.

இதனால் மணமுடைந்த துருபதன் அவர்களை பழி தீர்க்க வாரிசு வேண்டி மிகப்பெரிய யாகத்தை நடத்துகிறான்.

யாகத்தில் த்ருஷ்டத்யுமனன் என்ற மகன் தோன்றினான். அதன் பின் யாகத்தீ விண்ணை முட்டுகிறது. தீயில் இருந்து மறுபடியும் ஒரு உருவம் தோன்றுவது போல் தெரிந்தது.

அந்த அக்குரோசமான ஜுவாலையில் இருந்து கரிய நிறத்தில் அழகிய பெண் ஒருத்தி வெளியே வருகிறாள். தோன்றும் போதே வானில் பெரிய அசரீரி ஒலிக்கிறது.

“ குரு வம்சமானது இவளாளே அழியும்” என்று கூறியது. அப்படிப்பட்ட அந்த தீயில் தோன்றிய பெண்ணே “திரௌபதி” ஆவாள்.

இவளே பாஞ்சால நாட்டை சார்ந்ததால் பாஞ்சாலி என்றும், யாகத்தில் தோன்றியதால் யாகசேனி என்றும், கரிய நிறம் கொண்டதால் கிருஷ்ணை என்றும் பெயர்க் கொண்டாள்.

திரௌபதியின் சிறப்பு

அழகில் சிறந்தவள். எவரேனும் கண்டாலும் ஆசை கொள்ளும் அளவிற்கு பேரழிகி. அவளின் உடலில் இருந்து இயற்கையாகவே நீல தாமரையின் மணம் வீசுமாம்.

அழகிலும் அறிவிலும் சிறந்த பெண்ணாக விளங்குபவள். சர்வ லக்சணங்களும் பொருந்திய தேவலோக பெண்ணைப் போல் விளங்கினாள்.

திரௌபதியின் சுயம்வரம்

துருபதன் திரௌபதிக்கு திருமணம் நடத்த சுயம்வரம் அறிவித்தார். பல்வேறு தேச இளவரசர்களும், அரசர்களும் கலந்து கொண்டனர். துருபதன் தன் மகளை மணக்க போட்டி அறிவித்திருந்தார்.

கற்புக்கரசி பாஞ்சாலி பஞ்ச பாண்டவர்கள்

இயந்திரத்தில் சுற்றும் குறியை யார் சரியாக வில்லால் அடிகிறாரோ அவருக்கே தனது மகளை திருமணம் செய்து தருவதாக கூறினார்.

அர்சுனனே போட்டியில் வென்றார் பாஞ்சாலியை மணக்க ஆயத்தமானார்.

வெற்றி கொண்ட திரௌபதியுடன் குந்தியை காணச் சென்று, வென்ற விஷயத்தை கூறினார் அந்நிலையில் குந்தி வென்றது ஒரு பெண் என்று அறியாது.

வென்ற பொருளை ஐவரும் சமமாகப் பிரித்து கொள்ளுமாறு கூறினார். அனைவரும் அதிர்ந்தனர்.

குந்தியும் உண்மை அறிந்து அதிர்ந்தார். இருப்பினும் அன்னையின் வாக்கின் படி அனைவரும் ஒப்பு கொண்டனர்.

ஐவருடன் திருமணம் நடக்க காரணம் என்ன?

பஞ்ச பாண்டவர்கள்

பின்பு பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் திருமணம் ஏற்பாடனது. பாஞ்சாலியின் தந்தை துருபதனுக்கு மனம் ஒப்பவில்லை. இது குறித்து அவர் யுதிஷ்டிரனிடம் கேட்டார்.

தர்மம் தவறாத யுதிஷ்டிரனும் இந்த திருமணத்தில் எந்த தவறும் இருப்பதாக தோன்றவில்லை. மேலும் சில உயர்ந்த தர்மத்தை காக்க சட்டங்களை மீறலாம் என்று கூறினார்.

இந்த திருமணமானது நடமுறைக்கு மாறாது ஆனாலும் மிகப்பெரிய தர்மத்தை நிலைநாட்ட போகிறது. ஆனாலும் துருபதன் ஏற்க தயங்கினார்.

திரௌபதி பிறப்பு ரகசியம்

பாண்டவர்கள் அனைவரும் முற்பிறவியில் தேவர்கள். பாஞ்சாலி ஒருத்தி அல்ல நான்கு தேவர்களின் மனைவியின் சக்தியாவாள்.

எமனின் மனைவி சியாமளா, வாயுவின் மனைவி பாரதி, இந்திரனின் மனைவி சசி, இரண்டு அசுவினி குமாரர்களின் மனைவி உஷா ஆகியோரின் சக்தி ஆவாள்.

பஞ்ச பாண்டவர்கள்

1. தர்மன் – எமதர்மன்
2. பீமன் – வாயு
3. அர்சுனன் – இந்திரன்
4. நகுலன் & சகாதேவன் – அசுவினி குமார்கள்.

எனவே தான் அந்த தேவர்களின் அம்சமாக தோன்றிய பாண்டவர்கள் ஐவரும் இவளை மணக்க நேரிட்டது என்பதை வியாசர் ஞான திருஷ்டியின் மூலம் துருபதனிற்கு உணர்த்தினார்.

துருபதனும் திரௌபதியின் பிறப்பு ரகசியம் அறிந்து ஒப்புக் கொண்டு திருமணம் நடந்தேறியது.

திரௌபதியின் கற்பு நெறி

ஐவரின் மனைவியாயினும் திரௌபதி ஐந்து பத்தினி கன்னிகைகளில் ஒருவராகப் போற்றப்படுகிறார்.

சீதை, அகலிகை, தாரை, மண்டோதரி, திரௌபதி என்று கற்பு நெறி தவறாது வாழ்ந்த மாதர்களை போன்றுகின்றோம்.

திரௌபதி ஐந்து கணவர்களையும் சமமாக மதித்தாள். ஐவரை தவிற பிரிதொருவரை நினைக்கவில்லை.

மேலும் ஒருவரிடம் கூடிய பிறகு மற்றொருவரிடம் செல்லும் போது மீண்டும் கன்னித்தன்மையை அடையும் வரம் பெற்றிருந்தாள்.

எனவே கணவர் ஐவருடன் ஒழுக்கம் தவறாமல் வாழ்ந்தாள். வேறு எவர் மீதும் எந்த ஒரு இச்சையும் கொண்டதில்லை.

திரௌபதியின் சபதம்

கற்பு நெறி தவறாத திரௌபதியினை சூதில் வென்று துரியோதனன் சபையில் துச்சாதனன் அவளை நிர்வாணபடுத்த துகிள் உறித்தான்.

கிருஷ்ண பக்தியினால் அவள் காப்பாற்ற கிருஷ்ணனை அழைத்தாள். அவள் கற்பு தவறாத மங்கை. ஆதலால் அவள் துகில் நீண்டுக் கொண்டே சென்றது. மானம் காத்தருளினான் கிருஷ்ணன்.

தன் மானத்தை பங்க படுத்திய துச்சாதனனின் மார்பின் குருதியை தன் தலையில் பூசும் வரை கூந்தலை வாரி முடியேன் என சபதம் எடுத்தாள்.

தன் தொடையில் அமர சொன்ன துரியோதனின் தொடை நொருங்கும் வரை தன் சினம் தீராது என சபதம் மேற்கொண்டாள். அதன்படியே மகாபாரத யுத்தம் மூண்டு கௌரவர்கள் அனைவரும் மாய்ந்தனர்.

திரௌபதி என்கிற பத்தினி தெய்வம்

கற்புக்கரசி

பல்வேறு இன்னல்கள் வந்த போதிலும் தன் கணவர்கள் ஐவருக்கும் உறுதுணையாய் நின்று கௌரவ வம்சத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார்.

அந்த பத்தினி தெய்வத்திற்கு இன்றளவும் பல்வேறு இடங்களில் கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பக்தி, கற்பு, பெண்ணியம் மற்றும் ஒழுக்கத்திற்கும் சான்றாக விளங்கிய அந்த மகாசக்தியே திரௌபதி அம்மன் ஆவாள்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here