Home சிறப்பு கட்டுரை தூய தேன் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் ஏன்?

தூய தேன் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் ஏன்?

0
460
தூய தேன் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணம் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும்

தூய தேன் அருந்தும் போது தொண்டையில் ஒருவித எரிச்சலை உண்டாக்கும். மருத்துவ குணம் கொண்ட தேன் ஏன் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்று தெரியுமா?

தேன்

அனைவருக்கும் பிடித்த ஒன்று. இது இனிய உணவுப் பொருள் மட்டும் அல்ல மருத்துவ குணம் வாய்ந்ததும் கூட. அனைவரும் விரும்பி உண்ணும் மருத்துவ குணம் வாய்ந்த தேன் நமது தொண்டையில் எரிச்சலை உண்டாக்குமா???

தூய தேன்

பூக்களில் இருந்து பெறப்படும் ஒருவகை இனிப்பான வழுவழுப்பான திரவமே தேனீக்கள் மூலம் தேனாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் தேனில் குளுக்கோஸ், ப்ரக்டோஸ், நீர், பாலிஃபீனால், புரதங்கள், அமினோஅமிலங்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி

தூய்மையான தேன் நமது உடலில் உள்ள கிருமிகளை வளரவிடுவது இல்லை. இது ஒரு கிருமி நாசினி.

நம் உடலில் உள்ள எந்தவகையான நோய்க்கும் தேன் ஒரு மிகச்சிறந்த மருந்தாக இந்நாள் வரை இருக்கிறது.

தேன் தானும் கெடாமல் தன்னோடு சேரும் பொருளையும் கெடாமல் பாதுகாக்கும் தன்மை உடையது.

தொண்டை எரிச்சல்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது தேனிற்கும் பொருந்தும். மலர்களில் இருந்து தேனீக்களின் மூலம் சேகரிக்கப்படும் தேனில் குளுக்கோஸ் 40% முதல் 80% வரை நீர் நிறைந்ததாக இருக்கும்.

ஆனால், உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18% மட்டுமே நீர் இருக்கும். இதுவே தேனின் கெட்டித்தன்மைக்கு காரணம் ஆகும்.

இதனால் தான் தூய தேன் உட்கொள்ளும் பொழுது தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்துகிறது. அதுவே அதிகமாக உட்கொண்டால் சற்று எரிச்சலை உண்டாக்கும். அளவோடு உட்கொண்டால் எரிச்சலை தவிர்க்கலாம்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here