Home Latest News Tamil குடியரசு தினம் முதல் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயம்

குடியரசு தினம் முதல் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயம்

903
1
குடியரசு தினம் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு

குடியரசு தினம் முதல் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயம்

மஹாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயமாக்கப்பட உள்ளது.

வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இது அமல்படுத்தப்பட உள்ளது. மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிட்டத்தக்கது.

அமைச்சரின் அறிவிப்பு

மஹாராஷ்டிரா பள்ளிகளில் அரசியலமைப்பு முகவுரை வாசிப்பை கட்டாயமாக்க மஹாராஷ்டிரா அமைச்சர் அறிவித்துள்ளார்.

காலை இறைவணக்கத்தின் போது மாணவர்கள் இதையும் வாசிப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினம்

வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தில் இருந்து மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அரசியமைப்பு முகவுரை வாசிப்பு கட்டாயமாக்கப்படுகிறது.

இதன் மூலம் குழந்தைகள் தங்கள் அரசியலைப்பு சட்டம் குறித்தும் அதன் கொள்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ள இது வாய்ப்பாக அமையும் மற்றும் அது சார்ந்த மற்ற சட்டங்கள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

மேலும், ஒரு மாணவன் அவ்வாறு அரசியலமைப்பு முகவுரை வாசிக்கவும் உறுதிமொழி எடுக்கவும் ஆரம்பித்தால் அது அவனது குடியுரிமை பற்றிய உணர்வை அவனுள் உண்டாக்கும்.

தான் ஓர் இந்தியக்குடிமகன் என்பதை அவனை உணர வைக்கும். மேலும் நமது அரசியல் அமைப்பு கூறுகள், அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியும் என்பது போன்ற தனது கருத்தை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் பகிர்ந்து கொண்டார்.

Previous articleடிரம்ப் மீது எந்த நடவடிக்கையும் இல்லை – வெள்ளைமாளிகை
Next articleதூய தேன் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும் ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here