உலகக்கோப்பை: எந்தநிலையிலும் இறங்கி அடிக்கத் தயார்!
பலே ஃபார்ம் எம்.எஸ்.தோனி
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்தது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
முதல் போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடியதால் இந்தியா தோல்வியைத் தழுவியது என தோனியை அனைத்து ஊடகமும் விமர்சனம் செய்தன.
வழக்கம் போல அமைதிகாத்த ‘கேப்டன் கூல்’ 2, 3-வது போட்டிகளில் முக்கியமான தருணத்தில் தொடர்ந்து அரைச்சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார் .
இந்த தொடரில் 3 அரைச்சதங்களுடன் மொத்தம் 193 ரன்கள் அடித்துள்ளார். தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ப்னிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
2010-ம் ஆண்டிற்குப் பிறகு இத்தொடரில், தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரன் சேசிங்கில் தோனி சராசரி 100க்கு மேல் வைத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார்.
2018 சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும் இந்த ஆண்டில் அருமையான தொடக்கத்தை வெளிப்படுத்தி அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்துள்ளார்.
தோனியின் கருத்து,
பொதுவாகவே கடைசி ஓவர் வரை போட்டியைக் கொண்டு சென்று திரில்லாக சேஸ் செய்வதே தோனியின் வழக்கம்.
இந்தப் போட்டியில் விக்கெட் இல்லாமல் போனதால், மிகவும் பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.
கேப்டன் கோலி மற்றும் கேதார் ஜாதவ் நல்ல பர்ட்னர்சிப் கொடுத்ததால் விக்கெட் சரிவு இல்லாமல் எளிதாக போட்டியை வெல்ல இயன்றது எனக் கூறினார்.
மேலும், உலக கோப்பை போட்டிகளில் தோனியின் பேட்டிங் பொசிஷன் பற்றி கேட்கையில்,
14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளேன். அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் களம் இறங்கி அடிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.