WWCT20I NZw vs INDw: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா. மகளிர் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தியது. விளையாட்டுச்செய்திகள்.
WWCT20I NZw vs INDw
பிப்.27: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.
பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது
இன்று பிரிவு ‘ஏ’ வில் நடைபெற்ற 9 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மோதியது.
டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ஷாஃபாலி மற்றும் மந்தனா களமிறங்கினர். கடந்த இரு ஆட்டங்களில் அதிரடியாக ஆடிய ஷாஃபாலி ஷர்மா இந்த ஆட்த்திலும் அதிரடி காட்டினார்.
மகளிர் அணியின் சேவாக் என்று கூட சொல்லும் அளவுக்கு ஆடினார். 34 பந்துகளில் 46 ரன்கள் விளாசினார்.
மந்தனா 11, பாட்டியா 23, ராதா யாதவ் 14, ரோட்ரிக்ஸ் மற்றும் ஷிகா பாண்டே தலா 10 ரன்களும் சேர்த்தனர். இந்தியா இருபது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து தரப்பில் கேர் மற்றும் ரோஸ்மேரி தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர், இந்திய அணி கூட்டணி அமைக்க தவறியது.
களத்தில் நீண்ட நேரம் வீராங்கனைகள் விளையாட தவறியது அணியில் ஸ்கோர் அதிகரிக்காமல் போனதுக்கு காரணமாக அமைந்தது.
தொடரும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஃபார்ம் அவுட் ஆட்டங்கள்
134 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ளவும் ரன் சேர்க்கவும் திணறினார்கள்.
கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்கள் தேவை ஆட்டம் இந்தியா கையில் இருந்தது 19-வது ஓவரை பூனம் யாதவ் வீசி 18 ரன்கள் வாரிவழங்கினார்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது, ஷிகா சர்மா வீசிய முதல் பந்திலும் ஐந்தாவது பந்திலும் பவுண்டரி அடிக்க கடைசி பந்தில் ஐந்து ரன்கள் தேவை என்ற போது நியூசிலாந்தின் அமிலிய கேர் அடித்த பந்தில் காலில் பட்டு ஜேன்ஸன் ரன் அவுட் ஆனார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து ஆறு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேர் 34, மார்டின் 25, கீரின் 24 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் தீப்தி, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி, பூனம் யாதவ், ராதா யாதவ் அனைவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள்.
இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்று இந்த உலககோப்பையில் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்த மூன்று வெற்றிகளும் பந்துவீச்சாளர்களுக்கே சேரும். மிகவும் அருமையாக இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து வீசினார்கள்.
மூன்று ஆட்டங்களிலும் இந்திய முதலில் பேட் செய்து குறைந்த ரன்கள் எடுத்து வெற்றியை பெற்று வருகிறது.
ஆட்டநாயகன் விருது தொடர்ந்து இரண்டவது முறையாக ஷாஃபாலி ஷர்மா வென்றார். அடுத்த ஆட்டத்தில் வருகிற 29-ஆம் தேதி மெல்போர்னில் இலங்கையை எதிர்கொள்கிறது.
மகளிர் உலககோப்பை 2020 புள்ளி பட்டியல்
பிரிவு ஏ
TEAM P W L P
IND : 3 3 0 6
NZ : 2 1 1 2
AUS : 2 1 1 2
SL : 2 0 2 0
BAN : 1 0 1 0
பிரிவு பி
TEAM P W L P
ENG : 2 1 1 4
PAK : 1 1 0 2
RSA : 1 1 1 2
WI : 2 1 1 0
THAI : 2 0 2 0