WWCT20I: மகளிர் உலககோப்பை வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா. womens t20 world cup 2020 match update. இந்தியா vs வங்கதேசம் பெண்கள் டி20 உலகக்கோப்பை.
WWCT20I: மகளிர் உலககோப்பை
பிப்.25: 7-வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. பத்து அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.
ஏ-பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பி-பிரிவுவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா vs வங்கதேசம்
முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனை ஷாபாலி வர்மா அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
ரோட்ரிக்ஸ் 34 ரன்களும் சேர்ந்தனர். மொத்தமாக இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. வங்கதேச தரப்பில் சல்மா கதுன் 2 விக்கெட்டும், பான கோஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்கதேசம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதிகபட்சமாக நிகர் சுல்தானா 35 ரன்களும், மூர்ச்சித கதுன் 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் பூனம் யாதவ் 3 விக்கெட்டும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இருவருமே மிகவும் அருமையாக பந்து வீசினார்கள். இந்த வெற்றிக்கு இவர்களின் பந்துவீச்சு அதிக பங்களிப்பு ஆற்றியது.
உலககோப்பையில் இந்திய அணி பெறும் இரண்டாவது வெற்றி இது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது.
அதிரடியாக ஆடிய ஷாபாலி ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் இந்திய அணியினர் இப்போட்டியில் சில தவறுகள் செய்தனர்.
பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மான்பரீத் கவுர், ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். இந்திய மகளிர் ரன் சேர்ப்பதில் பார்ட்னர்சிப் அமைப்பதில் தவறுகின்றனர்.
இரண்டு ஆட்டகளிலும் பூனம் யாதவ் பந்து வீச்சு மட்டுமே வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 27-ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
நேற்று நடந்த மற்றோரு ஆட்டத்தில் இலங்கையை ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இன்று பிப்ரவரி 25 உலககோப்பை போட்டி எதுவும் நடைபெறவில்லை.