Home மருத்துவம் உயிரை பதம் பார்க்கும் பாக்கெட் உணவுகள்

உயிரை பதம் பார்க்கும் பாக்கெட் உணவுகள்

421
0
பாக்கெட் உணவுகள்

உயிரை பதம் பார்க்கும் பாக்கெட் உணவுகள்

அதிகம் பதப்படுத்தபட்ட  உணவுகளால் உயிர் அபாயம் நேரும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்

இன்றைய நவீன உலகத்தில் அனைத்து உணவுகளும் பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே .

கோழியிறைச்சி  ,ஐஸ் க்ரீம் ,காலை உணவுக்கான தானியங்கள் ,போன்ற அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் மனிதனின் சராசரி ஆயுள் குறைவதற்கு காரணமாகின்றன .

தொழிற்சாலைகளில் எந்த அளவுக்கு உணவு பதப்படுத்த படுகிறது என்பதை பொறுத்து  உணவுகள்  வகைப்படுத்த படுகின்றன

குறைந்த கலோரி உணவு:

குறைந்த கலோரி உணவு என்பது பதப்படுத்த அல்லது குறைந்தபட்ச அளவு பதப்படுத்திய உணவுகள் ஆகும்.

அவற்றில் பழங்கள் ,காய்கறிகள் ,பால் ,இறைச்சி ,அவரை வகை காய்கறிகள் ,அரிசி ,முட்டை  போன்ற உணவு தானியங்கள் அடங்குகின்றன .

பதப்படுத்திய உணவுகள்:

பதப்படுத்திய உணவுகள் என்பவை அதிக காலம் கெடாமல் இருக்க  அல்லது அதிக சுவை தருவதற்காக  கூடுதல் வேதியல் சார்ந்த கலவைகள் கலக்கப்பட்ட உணவுகள் ஆகும்.

பொதுவாக எண்ணெய் , சர்க்கரை ,உப்பு போன்றவைகளை பயன்படுத்தி நொதித்தல் முறையில் பதப்படுத்துவது ஆகும்.

இந்த வகையில்  பாலாடைக்கட்டி, உலர்ந்த இறைச்சி, ரொட்டி துண்டுகள் ,டின்களில் அடைக்கப்பட்ட குடிநீர் பானங்கள் ,உலர்ந்த பழங்கள், காய்கறிகள்,  மீன்கள் போன்றவை அடங்கும் .

அதிகம் பதப்படுத்திய உணவு:

மேற்சொன்ன இரண்டு வகைகளை விட அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளும் மக்களிடம் உபயோகத்தில் உள்ளன.

அதாவது சுவைக்காகவும் கேட்டு போகாமல் இருக்கவும் கூடுதலாக இனிப்பூட்டிகள் அல்லது  நிறமேற்றிகள் போன்றவை அடங்கும்

உணவு வகைகளில் ஐந்திற்கும் மேற்பட்ட கூடுதல் பொருட்கள் கலந்திருந்தால் அவை அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளில் அடங்கும் என்று ஸ்பெயின் நவ்வுரா பல்கலைக்கழக பேராசிரியர் மைரா பேஸ் ரெஸ்பியின்ஸ்டரோலா கூறுகிறார் .

இந்த ஆய்வில் சுமார் 19  ஆயிரத்து 899 பேர் பத்தாண்டு காலம் கவனிக்கப்பட்டு ஒவ்வோராண்டும் சோதனை முடிவுகள் பெற பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன .

சாப்பிடாதோர் இறப்பு:

ஆய்வு முடிவுகளின் படி அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை சாப்பிட்டோருடன் ஒப்பிடுகையில் அதிகம் பதப்படுத்தியதை சாப்பிடாதோர் இறப்பு  சுமார் 4  மடங்கு குறைவாக  உள்ளது .

பாரிஸ் பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் சுமார் ஒருலட்சத்து 5 ஆயிரம்  பேர்  பங்கேற்றனர்.

 இதய நோய்:

அதன்படி பெற பட்ட சோதனை முடிவுகளில் அதிகம் பதப்படுத்திய உணவு வகைகளை உட்கொண்டோரில் சுமார் 277  பேருக்கு இதய நோய் இருப்பது கண்டறிய பட்டுள்ளது  என்று பாரிஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர்  மதில்டே டவியர்  கூறுகிறார் .

பதப்படுத்த பட்ட உணவு குறித்த ஆய்வுகள்  நடைபெற்று  கொண்டிருக்கின்றன , இயற்கை உணவுகளை உண்பதை நாமும் நம்முடைய தலைமுறையினரும் வழக்கமாக்கி கொள்வோம்.

Previous articleஆர்யா சிறந்த கணவர்: சாயிஷா மகிழ்ச்சி டுவீட்!
Next articleகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரித்து வர்மாவிற்கு இன்று பிறந்தநாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here