Hantavirus Infection: இது என்ன புது வைரஸ் | எப்படி பரவும்?
Hantavirus Symptoms and diagnosis tamil : ஹண்டா வைரஸ் என்பது நுரையீரல் நோய்க்குறி ஆகும். இதற்கு எச் பி எஸ் (HPS) என்று சொல்லுவார்கள். Hantavirus Infection
இந்த வைரஸ் அரிதான வைரஸ் ஆகும். ஆனால் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும் . இது பெரும்பாலும் எலிகளில் இருந்து பரவுகிறது.
எலிகளின் சிறுநீர், சாணம் மற்றும் உமிழ்நீரில் அந்த வைரஸ் தொற்று பரவும். இதனால் நோய்த்தொற்று ஏற்படுகிறது .
இந்த சிறிய நீர்த்துளிகள் காற்றில் கூட நுழையலாம். எனவே காற்று வழியாக நம்மை பாதிக்க கூடும்.
அந்த காற்றை நாம் சுவாசிக்கும் பொழுது அல்லது அதனின் சிறுநீர் மற்றும் சாணத்தை சுற்றி நாம் இருக்கும் பொழுதோ நம்மிடம் அந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது.
ஆனால் கவலை வேண்டாம் ஹண்டா வைரஸ் மக்களிடமிருந்து பரவாது . எனவே உங்கள் சுற்றியுள்ள பகுதியை சுத்தமாக வைத்திருங்கள். அதுவே போதும். Hantavirus Infection.
HHPS ன் ஆரம்ப அறிகுறிகள் :-
-
சோர்வு, காய்ச்சல், தசை வலிகள், குறிப்பாக தொடைகள் இடுப்பு மற்றும் முதுகு வலி, தலைவலி, குளிர், மயக்கம் உணர்தல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி அதன்பிறகு இருமல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
-
உங்கள் வீட்டை சுற்றியுள்ள கொறித்துன்னிகள் கட்டுப்படுத்துவது இந்த தொற்று நோயை தடுக்க சிறந்த வழியாகும். கொறித்து உண்ணக்கூடியவை என்பது எலிகள், அணில் இவைதான் நாம் கொறித்து உண்ணிகள் என்று சொல்லுவோம்.
-
உங்கள் வீட்டிலோ அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் குறுகலான எலிகள் இருந்தால் அந்த சமயத்தில் உங்களுக்கு காய்ச்சல் வந்தால், ஆழ்ந்த தசை வலி மற்றும் கடுமையான மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.
-
இதற்கு இன்னும் தடுப்பூசி சிகிச்சைகள் எதுவும் இல்லை.
-
ஆரம்பக்கட்டத்தில் இதை கண்டுபிடித்து விட்டால் பின்பு எளிதாக குணப்படுத்தி விடலாம்.
-
பெரும்பாலும் இந்த வகை தொற்று நோய்க்கு சுவாச இயந்திரம் மற்றும் ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும்.
இந்த வைரஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இது உதவியாக இருக்கும் கிளிக்