அதிகமாகக் குடித்தால் ஆண்மை மட்டுமல்ல, அதுவும் போய்விடும்!
ஆல்கஹால் என்பது ஒரு போதை தரும் பானம். பெரும்பான்மையானோர் விரும்பி அருந்துவார்கள் குறிப்பாக ஆண்கள்.
ஆல்கஹால் நமது உடலுக்கு எந்த அளவிற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
அதிகமாக ஆல்கஹால் பருகுவதால் மூளையிலிருந்து ரத்தத்தின் சக்கரை அளவு அதிகரிப்பு, சிறுநீரக இழப்பு மற்றும் பல் சொத்தையும் ஏற்படுகிறது.
மாடரேட் டிரிங்கெர்ஸ் (moderarte drinkers)
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு ட்ரிங் எடுத்துக்கொள்ளும் பெண்களும் இரண்டு ட்ரிங்க்கு குறைவாக எடுத்துக்கொள்ளும் ஆண்களும் மாடரேட் டிரிங்கெர்ஸ் என்று அழைக்கப்படுகின்றனர்.
பல் சொத்தை ஏற்படுதல்
தினமும் அதிகமாக குடிப்பதால் பல்லின் மேற்பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டு பல் சிதைவு ஏற்படுகிறது.
ஆல்கஹாலுடன் சோடா அல்லது பிற பானங்கள் சேர்ப்பதால் ஏற்படும் கலவையில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். இது பல்சொத்தை, பற்சிதைவை ஏற்படுத்தும்.
ஆல்கஹால் உடலில் சேரும் பொழுது, உடலில் உள்ள நீரின் அளவு குறையும். இதனால் வாய்யில் எச்சிலின் உற்பத்தி குறைந்து நாக்கு வறண்டு விடும். இதன் காரணமாகவே மது அருந்தினால் அடிக்கடி தாகம் ஏற்படுகிறது.
வாய் மற்றும் பல்லின் சுற்றுப்புற பகுதிகளில் காணப்படும் பாக்டீரியாக்களை அகற்ற எச்சில் தேவை. இவ்வாறு எச்சில் இல்லாத நேரத்தில் பல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்படையும்.
குரோமோஜென்ஸ் என்ற பொருள் தான் ஆல்கஹாலின் நிறத்திற்கு காரணம் ஆகும். அதிகமாக ஆல்கஹால் பகிருவதால் நீங்காத கரை பற்களின் மீது படிகிறது.
தீர்வு
மது அருந்திய பிறகு பல்துலக்கினால் பல்லின் மீது படிந்துள்ள சர்க்கரையை அகற்ற முடியும்.
அதிகமாக தண்ணீர் பகிருவதால் உடலில் உள்ள நீரின் அளவை சமமாக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் என்னதான் முயற்ச்சி செய்தாலும் அளவாக குடிக்காவிட்டால் உங்கள் உடலை பாதுகாக்க இயலாது.