Home சினிமா இந்திய சினிமா Kumbalangi Nights – கும்பளங்கி நைட்ஸ்: பார்த்தாச்சா?

Kumbalangi Nights – கும்பளங்கி நைட்ஸ்: பார்த்தாச்சா?

591
0
one year of Kumbalangi Nights - கும்பளங்கி நைட்ஸ்: பார்த்தாச்சா?

Kumbalangi Nights – கும்பளங்கி நைட்ஸ்: பார்த்தாச்சா? one year of kumbalangi nights. நீங்கள் ஒரு சினிமா பிரியரா நிச்சயம் இந்த படத்தை பாருங்கள்.

மலையாள சினிமா

மலையாளப்படங்களின் மீது நம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனி ஈர்ப்பு உள்ளது.

படத்தின் எளிமையான கதைக்களம்; கதைகளை படமாக்கும் விதம், படத்தின் எதார்த்த தன்மை; கதையின் நாயகர்கள், நாயகிகளின் கதாப்பாத்திர வடிவமைப்பு என்ற காரணங்கள் நீண்டு கொண்டிருக்கிறது.

இருப்பினும் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதுதானே அடிப்படையாக இருக்க முடியும்!

இப்படி மலையாள சினிமாக்களை மேலும் நேசிக்க ஒரு காரணமாய் அமைந்த திரைப்படம்தான் “கும்பளங்கி நைட்ஸ் (kumbalangi nights)”.

இப்படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது (one year of kumbalangi nights). இப்படத்தை பார்த்த பெரும்பாலனவர்களுக்கு கும்பளங்கி நைட்ஸ் தான் 2019-ன் ஃபேவரைட் திரைப்படம்.

கும்பளங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)

ஃபகத் பாசில், செளபின், ஷேன், ஶ்ரீநாத், மெத்யூ தாமஸ், அன்னா பென் மற்றும் இன்னும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கதையை ஒருவர் எழுத மற்றொருவர் இயக்கியது இப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆம்!ஷ்யாம் புஷ்கரன் என்பவர் திரைக்கதை எழுத மது என்பவர் இப்படத்தை இயக்கினார்.

படத்திற்கு சுஷின் ஷ்யாம் என்பவர் இசையமைத்திருக்கிறார். மேலும் சிறப்புத் தோற்றத்தில் ரமேஷ் திலக்கும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நான்கு சகோதரர்களின் வாழ்வியலையும், அவ்வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் ஏக்கம், அழுகை, காதல், புன்னகை, சகோதரத்துவம், நட்பு எனப் பல உணர்வுகள் கலக்க சொல்லியிருக்கிறார்கள்.

நான்கு சகோதரர்கள்

ஒரு பக்கம் நான்கு சகோதரர்கள் மட்டும்தான். வீட்டில் சொல்லிக்கொள்ளும் படியான வேலைகள் இல்லை. குறிக்கோள்களும் இல்லை.

வெறுமனே சுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது வலை வீசி மீன் பிடிக்கவும் செல்வார்கள். இளையவன் மட்டும் பள்ளியில் படிக்கிறான்.

முதல் இரு சகோதரர்களுக்கு ஒரே வயது. ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக அமைந்த ஆறுக்கறுகில் கட்டிமுடிக்கப்படாத வீடு என்றுதான் கதையின் நிலை ஆரம்பிக்கிறது.

மற்றொரு பக்கம் முடித்திருத்தும் தொழில், சுத்தக்காரர், புதியதாக கல்யாணமானவர், மிஸ்டர் பர்ஃபக்ட் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார் பகத் பாசில்.

இவரின் மனைவியின் தங்கைதான் அன்னா பென். அன்னா பென்னை காதலிக்கிறார் . நான்கு சகோதரர்களில் மூன்றாம் சகோதரான ஷேன்.

இவ்வாறாக பகத் பாசிலும் நான்கு சகோதரர்களுகும் கணக்ட்செய்யப்படுகிறார்கள். ஆனால் இது மட்டுமே கதையல்ல!

மூன்று பெண்கள்

சகோதர்கள் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். தேவதைகள் வருகையால் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.

ஆனால், தேவதைகளால் ஏற்பட்ட மாற்றம் போல் அதுகாட்டப்பட்டிருக்காது. இச்செயல் படத்தின் மிகப்பெரிய பலம்.

படத்தின் காட்சிகள் திணிக்கப்படவில்லை. கதைக்கேற்ப அதுவாய் நிகழ்கிறது. மழை வந்த பின்னான செடிகளின் செழித்த நிலைப்போல!

படத்தில் உள்ள அனைத்து பெண்களுமே பாராட்டப்படக்கூடியவர்கள். நடிப்பிற்காக என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களின் கதாப்பாத்திர வடிமைப்பு அப்படியானது.

எட்டமுடியாத உயரத்தில் பெண்களை வைத்துவிட்டோ, வெறுமனே அழகாகவோ, எதேனும் ஒன்றில் சாதித்தபடியோ இப்பெண்கள் காட்டப்படவில்லை.

சதாரணப் பெண்களை சதாரணமாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், நாம் படத்தை பார்க்கும்போது அவர்கள் எவ்வளவு அசாத்தியமானவர்கள் என்பது புலப்படும்.

படம் முடிந்த பின் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது நம் வீட்டுப் பெண்களை வியப்பாக பார்க்கும் எண்ணம் வரும்.

இயல்பான நடிப்பு

நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு நடிக்கத் தெரியும் என்பதற்காக ஓவர் ஆக்டிங் செய்யாமல் கதையில் தன் கதாப்பாத்திரத்தின் அளவை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக படத்தில் செளபினும், பாசிலும் நடிக்கவே இல்லை இயல்பாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நமக்கு தரும் வகையில் உள்ளது அவர்களின் நடிப்பு.

படத்தின் ஆரம்பத்திலே நம்மை கட்டியணைக்கிறது இசையும் காட்சிகளும். படத்தில் கதை நகர நகர கதாப்பாத்திரங்களின் தோரனைகள் பிடித்துப்போகிறது.

அனைத்து கதாப்பாத்திரங்களையுமே நம் வாழ்வில் நாம் எங்கேயாவது பார்த்திருப்போம்! அப்படியில்லையெனில் நிச்சயம் கேள்வியாவது பட்டிருப்போம்.

படத்தில் உள்ள அனைத்து எமொஷனல் காட்சிகளும் வொர்க் ஆகியிருக்கிறது என்பது கதையின் உச்சம்.

திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிய நிலையில், இப்பொழுதும் பலர் தன் சோக சமயங்களில் இப்படத்தை பார்த்து இன்புறுகிறேன் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டபடியேதான் உள்ளனர்.

பார்க்காமல் இருந்தால் நீங்களும் நிச்சயம் பார்க்கலாம். அமேசான் ப்ரைமில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மலையாள சினிமாக்களை மேலும் இரசிக்க ஒரு காரணமாய் “கும்பளங்கி நைட்ஸ்

Previous articleஎடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள்: தேவை தானா?
Next articleDelhi Election: 10 மணிக்குள் வாக்களியுங்கள் – அமித்ஷா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here