‘அம்மாங்கிறது உறவு மட்டுமில்ல’-பென்குயின் திரைவிமர்சனம். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அமேசானில் நேரடியாக திரையிடப்பட்டுள்ள பென்குயின் திரைப்படத்தின் விமர்சனம் இதோ.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மேமாதம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் திரைப்படம் பல எதிர்ப்புகளை தாண்டி OTT தளத்தில் நேரடியாக திரையிடப்பட்டது.
முன்னணி இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் இந்த திரைப்படத்தை திரையிட்டது. இதேபோல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின் திரைப்படமும் இன்று அமேசானில் நேரடியாக திரையிடப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாஸ்டர் அத்வைத், மதி, நித்ய கிருபா, மதம்பட்டி ரங்கராஜ், ஹரிணி, தேஜன்க், முரளி, ஐஸ்வர்யா ரமணி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பென்குயின் திரைப்படத்தில் பொன்மகள் வந்தாள் போலவே குழந்தை கடத்தல் தாய்மை உணர்வு முதலியவை பொதுவாகவே உள்ளன. Iruppi
கதையின் கரு மற்றும் கதையின் இறுதி என்பது முற்றிலும் மாறுபட்டு கதைக்கு சற்று வலிமை சேர்ந்துள்ளன. கீர்த்தி சுரேஷின் நடிப்பும் கதைக்கு கூடுதல் வலிமை.
திரைப்படத்தில் வரும் மலைப்பகுதி, குலுமை, குழந்தை கடத்தல், காட்டுப்பகுதி, ஆகியவை பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை நினைவுபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை.
கதை :
நிறைமாத கர்ப்பிணியான ரிதம் கவலையுடன் இருக்கிறார். அவ்வப்போது தனது கடந்தகால நினைவுகள் கனவுகளாக அவளை துரத்துகின்றன.
ரிதம் (கீர்த்தி சுரேஷ்), ரகு (லிங்கா) இருவரின் 3 வயது மதிக்கத்தக்க மகன் அஜய் (மாஸ்டர் அத்வைத்) பள்ளியில் விளையாடி கொண்டிருக்கிறான்.
அப்போது சார்லி சாப்ளின் உருவத்தில் யாரோ ஒருவர் அழைத்து சென்றதாக அவனது வகுப்பு தோழி ரிதமிடம் கூறுகிறாள். குழந்தையை தேடி அலைகிறாள்.
அருகில் உள்ள ஏரிக்கரை முழுவதும் போலீசார் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையின் துணிகள் பள்ளி பை மட்டும் கிடைக்கின்றன.
இதன் பின்னால் ரிதம் ரகு இருவரும் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காமல் ஒரு கட்டத்தில் அஜய் இறந்துவிட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதை துளியும் நம்பாத அஜய்யின் தாய் தொடர்ந்து பல முயற்சிகளை எடுக்கிறாள். தன் மகனின் நினைவில் அழுதுகொண்டே இருக்கிறார்.
இதனால் கணவன் குழந்தை இப்படி ஆனதற்கு ரிதமை காரணம் காட்டி சண்டையிட்டு இருவரும் பிரிகின்றனர்.
இதன்பின்னர் ரிதமை உன்னை இருக்கும் மனநிலையிலேயே நான் ஏற்றுக்கொள்கிறேன் என கௌதம் திருமணம் செய்துகொள்கிறார். அதன் பின்னரும் தன் குழந்தையை தேடுவதை ரிதம் நிறுத்தவில்லை.
ஒரு நாள் தன் குழந்தை காணாமல் போன ஏரி அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் கிடக்கிறாள் ரிதம். அங்கு அந்த சார்லி சாப்ளின் உருவத்தை பார்க்கிறாள்.
அந்த உருவம் ஒருவரை கொலை செய்வதையும் பார்க்கிறாள். இதன்பின்னர் இதேமுறையில் மேலும் ஒரு குழந்தை கடத்தப்படுவது தெரிந்து மீண்டும் ஏரிக்கு செல்கிறாள்.
செல்லும் வழியில் தனது கார் முன்பாக குழந்தை ஒன்று வந்து நிற்பதை பார்த்து அதிர்ந்து தனது காரை சுதாரித்து நிறுத்துகிறாள்.
அருகில் சென்று பார்க்கையில் அது தனது மகன் என அறிந்து அதிர்ந்து அழுகிறாள். 6 வருடங்களுக்கு பின்னர் கிடைத்த குழந்தை பேசவில்லை, தன்னை அடையாளம் காணவில்லை என அறிகிறாள்.
யார் எதற்க்காக கடத்தினார்கள்? எண் குழைந்தையை என்ன செய்தார்கள்? ஏன் இப்படி? என்ற கேள்விகளோடு தனது விடை காணும் பயணத்தை தயிரியத்துடன் நடக்கிறாள்.
பல முடிச்சுகளுடன் விறுவிறுப்பாக செல்லும் கதையில் இறுதியில் சுவாரசியம் கலந்து காட்டப்பட்டுள்ளது. இறுதிவரை சுவாரசியம் குறையாமல் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கும் பென்குயின் உண்மையில் தாய்மையின் வலிமையை சொல்லும் படம். அம்மாங்கிறது உறவு மட்டுமில்ல. அது ATTITUDE என ரிதம் கடைசியாக சொல்லும் பொது ஒவ்வொரு தாயின் மனதை பிரதிபலித்திருக்கிறார்.