Home திரைவிமர்சனம் Movie Review VadaChennai | வடசென்னை – த்ரில் ஹிட்

Movie Review VadaChennai | வடசென்னை – த்ரில் ஹிட்

415
0
Movie Review VadaChennai

Movie Review VadaChennai | வடசென்னை – த்ரில் ஹிட். வடசென்னை திரைவிமர்சனம்.

வடசென்னையை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துவிட்டன. ஒவ்வொரு படமும் ஒருவித பிரச்சனைகளை பற்றிப் பேசினாலும், அனைத்துப் படங்களுமே நார்த் மெட்ராசின் முக்கிய அம்சங்களை கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும்.

இதுவும் அங்கு நடந்த சில உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிவந்த தாதா, ரவுடி, கேங்வார் படங்களைப் போன்று தான் இதுவும். கதை பழசு.

முதல் பாதியை பார்க்கும்போது நம் மனதில் தோன்றியதும் அதுவே. இந்த படத்துல என்ன புதுசா சொல்லப்போறாங்க. இந்த படத்த எடுத்து முடிக்க இவ்ளோ நாளா? என சலிப்பு தட்டியது.

எக்கசக்க கேரக்டர்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்ய, ஆடியன்ஸ் முகத்தில் குழப்பத்தைக் காண முடிந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் ஓவ்வொரு முடிச்சாக அவிழ்த்து. அனைத்து கேரக்டர்களையும் மனதிற்குள் பதியவைத்துவிட்டார் வெற்றிமாறன்.

கதை பழசு என்பதை வெற்றிமாறனின் ஸ்க்ரீன்ப்ளே மறக்கடித்துவிட்டது. இப்படத்தின் ஸ்கீரின்ப்ளே மட்டும் பலவீனமாக அமைந்திருந்தால், படம் நிச்சயம் ப்ளாப்.

அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட்கள், யூகிக்க முடியாத கதை நகர்வுகள், யூகிக்க முடியாத காட்சிகள், மிரட்டலான பைட் சீன்கள் என கிளைமேக்ஸ் வரை அதகளப் படுத்திவிட்டார் வெற்றிமாறன்.

ஆடியன்சை கவர்ச்சியால் கிறங்கடிக்க, ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் ஆண்டிரியா இடையே கடும் போட்டியே நடந்துள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஆடைகளை களைவதில் தாராளம் காட்டியுள்ளனர்.

படத்தில் மேலாடை இல்லாமல் வரும் ஆண்ட்ரியா, உள்ளாடை இல்லாமல் வரும் ஐஸ்வர்யா நிஜமாக நடித்தது போல் இருந்தாலும், மார்பிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

மற்றபடங்களில் இல்லாத ஒரு விஷயம், கெட்ட வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டது. நிஜத்தில் வடசென்னை எவ்வளவு கலீஜ் என்பது நச்சென்று வெளிப்பட்டுள்ளது.

படத்திற்கு இசை, ஒளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் கூடுதல் பலம். படத்தில் வரும் நிறைய கதாப்பாத்திரங்கள் நன்கு அறிந்த முகங்களே. அனைவருமே நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தனர்.

படத்தின் முக்கிய ஹீரோ ராஜன். ராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்தது வேறுயாருமல்ல, இயக்குனர் அமீர். நடிப்பில் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டார்.

80, 90களில் எம்.ஜி.ஆர் ஆட்சியின் கீழ், வடசென்னை தாதாவை நேரில் பார்த்த அனுபவம். அப்படி ஒரு நடிப்பு. படத்தின் முக்கியத் தூண் அமீர் அமீர் அமீர்….

படத்தில் குறையெனில், அனைவருக்கும் தலையில் ‘விக்’ மாட்டி வேடிக்கை காண்பித்தது. அதற்கு காரணம், படத்தின் தாமதம் என நினைக்கிறேன்.

படம் எடுப்போமா என வெற்றிமாறனே ஒரு நேரத்தில் நம்பிக்கை இழந்திருக்க கூடும். தனுஷ் அந்த அளவிற்கு படத்தில் நடிக்க தாமதப்படுத்திவிட்டார்.

மொத்தத்தில், வடசென்னை த்ரில் ஹிட்.

Previous articleசர்கார் படத்தை முடக்க சதி: விஜய் மகிழ்ச்சி!
Next articleMovie Review Sandakozhi 2 | சண்டக்கோழி 2 திரைவிமர்சனம்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here