சர்கார் படத்தை முடக்க சதிவலை பின்னப்பட்டுள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் விஜய்யும், முருகதாசும் படு ஹேப்பியாக உள்ளனராம்.
விஜய் சத்தம் இல்லாமல், ரத்தம் சிந்தாமல் நடித்தாலே ஏகப்பட்ட பஞ்சாயத்துகளை சந்திப்பார். மெர்சலா அரசியல் பேசிய இப்படத்திற்கு மட்டும் இன்னும் பிரச்சனையே எழவில்லையே?
இப்படத்தை பார்த்து, சன்பிக்சர் கலாநிதி மாறனே கொஞ்சம் பயத்தில் உள்ளாராம். காரணம், சமீபத்தில் நடந்த சர்கார் ஆடியோ விழா.
விஜய் மேடை ஏறியதும், தீபாவளி பட்டாசை முன்கூட்டியே வெடித்து தள்ளிவிட்டார். விஜய் பேசியது மற்றும் தடையாக மைக் ஸ்டான்ட் இருக்கக் கூடாது என பிரசன்னா நகர்த்தியது வரை அனைத்தும் செட்டப்.
முன்கூட்டியே விஜய் எப்படி பேச வேண்டும், பிரசன்னா எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும். பக்காவாக ஸ்கிரிப்ட் ரெடி செய்து கொடுத்துள்ளார் முருகதாஸ்.
இது காலாநிதி மாறனுக்கே தெரியாமல் நடந்துள்ளது. இதனால் படம் சென்சாருக்கு அனுப்பும்முன் தி.மு.க.விற்கு எதிராக வசனம் உள்ளதா என செக் செய்து அனுப்ப முடிவு செய்துள்ளாராம்.
அடுத்து மத்தியிலும், மாநிலத்திலும் படத்தின் சென்சாருக்காக காத்துக்கொண்டு உள்ளனராம். அவர்களுக்கு எதிராக வசனம் இருந்தால் படத்தை முடக்க முடிவு செய்துள்ளனராம்.
படம் ரிலீஸ் வரை அமைதி காத்து, ரிலீசானவுடன் பாதுகாப்பை காரணம் காட்டி, படத்தை பாதியிலேயே நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சனையை சந்திக்க வேண்டும் என முடிவு செய்தே, சர்கார் படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, விஜய்யும், முருகதாசும் படு ஹேப்பியாக உள்ளனராம்.