Mr. Local Movie Review | மிஸ்டர் லோக்கல் என்று டைட்டில் வைத்ததுமே ஏதோ தர லோக்கலாக ஒரு காமெடி காம்போவை எடுத்து வைத்து இருப்பார் எம்.ராஜேஷ் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஹாட்ரிக் கிட் கொடுத்த வேகத்தில் ஹாட்ரிக் ப்ளாப் கொடுத்த இயக்குனர் எம்.ராஜேஷ். இருப்பினும் ராஜேஷ் படம் என்றால் இந்த முறையும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
அந்த அளவிற்கு அவருடைய முதல் மூன்று படங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இன்றும் அந்தப் படங்களின் காமெடிகளைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடிவதில்லை.
Mr. Local படம் எப்படி?
மிஸ்டர் லோக்கல் படம் எந்த அளவிற்கு காமெடி ஒர்க்அவுட் ஆகியுள்ளது எனக் கேட்டால், கடைசி மூன்று படங்களை விட நன்றாகவே உள்ளது எனச் சொல்லும் அளவிற்கு உள்ளது.
ஆனால் சிவகார்த்திகேயன் இருந்தும் இதில் காமெடி மிகவும் குறைவு தான். காமெடி காட்சிகள் பல இருந்து அதை பலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஏ சென்டர் ஆடியன்ஸ் புரிந்துகொள்ளக்கூடிய காமெடிகளை சி சென்டர் ஆடியன்சால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மன்னன் படத்தை வைத்து ரீமேக் செய்துவிட்டனர் எனக் கூறினாலும் இந்தப் படம் மன்னன் படம் அளவிற்கு எல்லாம் ஒன்றும் இல்லை.
சிவகார்த்திகேயன் படங்கள் காமெடி எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவு செண்டிமென்ட் காட்சிகள் நிறைந்து இருக்கும்.
ஆனால் இந்த படத்தில் செண்டிமென்ட் காட்சிகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இதனால் பேமிலி ஆடியன்சையும் இது முழுமையாக திருப்திப்படுத்தாது.
படம் சுமாராக இருந்தாலும் சிவகார்த்திகேயனின் மாஸ் காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை. சீமராஜாவில் வாங்கிய அடியில் வெத்து பில்டப்புகளை குறைத்தது மிகவும் நலம்.
விஜய், அஜித் இடங்களைவிட நேராக ரஜினியின் இடத்தைப் பிடிக்க சிவகார்த்திகேயன் முயற்சி செய்வது நன்றாகத் தெரிகிறது. அதற்கேற்ற வலுவான படங்களில் தொடர்ந்து நடித்தால் தான் அது சாத்தியம் ஆகும்.
எம்.ராஜேஷ் சரக்கு மேட்டரை விட்டுவிட்டார். ஆனால் காமெடி சரக்குகள் அவரிடம் பெரிய அளவில் ஸ்டாக் இல்லை போலும்.
நயன்தாரா இந்தப் படத்தில் முக்கால்வாசி நேரம் முறைத்துக்கொண்டே உள்ளார். அவர் முறைக்கும் காட்சிகள் அவரின் வயதை அப்பட்டமாகக் காட்டிக்கொடுக்கிறது.
நயன்தாராவின் ஆட்டம் இன்னும் சில படங்கள் மட்டுமே. அவரின் வயதை குறைத்து காமித்து நாடித்தால் மட்டுமே லேடி சூப்பர் ஸ்டார் என இன்னும் சில வருடம் வண்டி ஓடும்.
இல்லையெனில் விக்னேஷ்சிவன் ரூட் கிளியர். பட வாய்ப்பு இல்லையென கல்யாணம், மனைவி, பிள்ளைகள் என நயன்தாரா ரூட்டை மாற்றிவிடுவார்.
க்ளைமேக்ஸ் ஹீரோ
கிளைமேக்ஸ் காட்சியில் ராஜேஷ் பட ஹீரோக்கள் என்ட்ரி கொடுப்பது வழக்கம். இந்த முறை கிளைமேக்ஸில் என்ட்ரி கொடுத்தது மெயின் ஹீரோ இல்லை துணை நடிகர் நாராயண் லக்கி.
ஓகேஓகே படத்தில் ஹன்சிகாவை நல்ல கொழு கொழுன்னு பூசணிக்காய் மாதிரி இருக்கே என ரெஸ்டாரண்டில் கலாய்பாரே அவர் தான்.
அந்தக் காமெடியை இன்று பார்த்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. அதேபோன்று இந்த படத்திலும் நயன்தாராவிற்கு பல்ப் கொடுக்கும் காட்சி உள்ளது.
அந்தக் காட்சியில் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லை என்பதால் இந்த படத்தை பெரிய அளவில் பாராட்ட முடியவில்லை.
இருப்பினும் பெரிய அளவில் படம் பார்க்க வருபவர்களுக்கு இப்படம் எரிச்சலை ஏற்படுத்தவில்லை. எனவே படத்தை ஒருமுறை பார்க்கலாம்.