Sex Education Netflix: கட்டாயம் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ். செக்ஸ் எஜுகேஷன் கதைக்களம், செக்ஸ் எஜுகேஷன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியவை, அதிகம் பேசப்பட்ட கதாப்பாத்திர அமைப்பு.
செக்ஸ் கல்வி என்பது முதலில் நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இந்தியாவில் இதை அமல்படுத்த மிகவும் தயங்குகின்றனர்.
மேற்கத்திய கலாச்சாரங்களில் செக்ஸ் கல்வி என்பது வழக்கமான ஒன்று. மாணவர்கள் தங்களுடைய டீன்ஏஜ்ஜில் இருந்து செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலை பெறுகின்றனர்.
செக்ஸ் எஜுகேஷன் வெப் சீரிஸ் (Sex Education Netflix) நெட்ப்லிக்ஸ் இணையத்தில் சென்ற ஆண்டில் முதலாவது, இந்த ஆண்டில் இரண்டாவது சீஸன் வெளியானது. இது உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது.
நான் இதை பார்க்க தொடங்குவதற்கு முன் பிற ஹாலிவுட் திரைப்படங்களைப்போல் இது ஒரு செக்ஸ் காமெடி கதைக்களம் கொண்டதாகத்தான் இருக்கும் என்று ஆரம்பித்தேன்.
ஆனால் நான் எண்ணியது தவறு என எனக்கு புரிய வைத்தது. இது முழுவதும் நாம் இளமைப்பருவத்தில் சந்திக்கும் செக்ஸ் தொடர்பான பிரச்சனைகளை கொண்டே இருக்கும்.
செக்ஸ் எஜுகேஷன் கதைக்களம்
செக்ஸ் தெரபிஸ்ட் (milbun) மகனாக இருக்கும் ஓட்டிஸ் (otis) தன்னுடைய அம்மாவிடம் சில விசயங்களை கற்றுக்கொண்டு தன்னுடைய தோழி மேவ்வுடன் (maeve) சேர்ந்து பள்ளியில் சக மாணவர்களுக்கு செக்ஸ் ஆலோசனை வழங்குகிறார்கள்.
ஓட்டிஸ்க்கு சிறந்த நண்பனாக எரிக் மற்றும் காதலியாக மேவ் இவர்கள் மூவருமே கதையை எடுத்து செல்வார்கள் இவர்களைச் சுற்றியே கதை நகரும்.
இதில் நாம் யாரையும் ஹீரோ ஹீரோயின் என்று குறிப்பிட இயலாது. கதை வெறும் இருவரை மட்டும் வைத்து நகராது. குறைந்தது 8 கதாப்பாத்திரங்களுக்கு இதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பார்கள்.
இளமைப்பருவத்தில் நாம் சந்திக்கும் செக்ஸ் மற்றும் ரிலேஷன்சிப் தொடர்பான பிரச்சனைகளை கொண்டே கதை முழுவதும் வரும்.
இதில் எதார்த்தம் என்னவென்றால் ஒவ்வொரு காட்சிகளிலும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அதே நேரத்தில் எமோஷனல் காட்சிகளும் நம்மை உரைய வைக்கும் அவ்வப்போது.
செக்ஸ் எஜுகேஷன் இணைய சீரியல் சொல்ல வருவது ஓரினச்சேர்க்கை, சிறு வயதில் கருக்கலைப்பு, சுய இன்பத்திற்கு அடிமையாகுதல், நிர்வாணப் புகைப்படங்கள், கேஷுவல் செக்ஸ் இவை ஒரு பக்கம்.
மற்றொரு பக்கம் ஒரு தலை காதல், காதல் காம வேறுபாடு, காதல் தோல்வி, காதலில் வரும் குழப்பங்கள், விவாகரத்து பிற ரிலேஷன்சிப் தொடர்பான பிரச்சனைகளை மிகவும் தெளிவாக எழுதியிருப்பார்கள்.
செக்ஸ் எஜுகேஷன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டியவை
உடலுறவு என்பது வெறும் இனப்பெருக்கத்திற்காக மட்டும் செய்வது அல்ல என்பதை நாம் அறிய வேண்டும். இதில் இருவருக்கும் மிக ஆழ்ந்த இன்பம் கிடைக்க வேண்டும்.
ஆனால் பெண்கள் எப்பொழுதும் இதில் முழு திருப்தி அடைவதில்லை. இது இருவருக்கு இடையேயான உறவை பலவீனப்படுத்துகிறது. நம்முடைய துணையின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும்.
நம்முடைய காம தேவைக்காகவும் ஆர்வத்திற்காகவும் எதிர் பாலினத்துடனோ அல்லது ஒரே பாலினத்துடனோ உடல் உறவு வைத்து கொள்ளுதல் இயல்பு.
மேலும் இதில் காமத்திற்கும் காதலுக்கும் உள்ள வேறுபாட்டையும் காட்டியிருப்பார்கள். கன்னித்தன்மை இழப்பு என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. அதற்கும் தன்மானத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.
ஆணிற்கும் பெண்ணிற்கும் ஏற்படும் காதலைப்போல ஒரே பாலினத்திற்கு ஏற்படும் உறவுகளும் இயற்கையானதே. அதையும் நாம் மதிக்க வேண்டும்.
அவர்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது. அதை ஒரு பொழுதும் கேளிக்கை செய்யக் கூடாது. பொது இடங்களில் பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை திட மனதுடன் எதிர்கொள்ள வேண்டும்.
நம்முடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியேறும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது, அந்தரங்க உறுப்புகளின் அளவை வைத்து கேளிக்கை இது போன்ற நிகழ்வுகளும் காட்சிப்படுத்தபட்டிருக்கும்.
பருவ நிலை அடைந்த பிறகு சுய இன்பம் அது தொடர்பாக நாம் செய்யும் சில வேடிக்கையான செயல்கள் இது போன்று அனைவருக்கும் ஏற்படும். இது வழக்கமான ஒன்று என்பது போன்று.
இவை போக காதலில் வரும் பிரச்சனைகள், எதனால் காதல் தோல்வி ஏற்படுகிறது. காதலுக்கு அழகும் கன்னித்தன்மையும் அவசியம் இல்லை.
காதலுக்கு உண்மையும் நம்பிக்கையும் புரிதலும் மட்டுமே போதுமானது. என்பது போன்று பல நிகழ்வுகள் நாம் வாழ்க்கைக்கு தேவையானதாக இருக்கும்.
ஆக மொத்தம் பாதுகாப்பாக எப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது மற்றும் ரிலேசன்சிப் பிரச்சனைகளை எப்படி கையாள்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அதிகம் பேசப்பட்ட கதாப்பாத்திர அமைப்பு
மேவ் மற்றும் ஓட்டிஸ் இடையேயான காதல் கதை மிகவும் எதார்த்தமாக இருக்கும். இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் அருமையாக எழுதப்பட்டிருக்கும்.
முதல் சந்த்திப்பில் ஓட்டிஸ் மேவை கருக்கலைப்பு மையத்தில் சந்திப்பான். அவனிடம் எந்த ஒரு வெறுப்பும் தெரியாது.
அவள் அவ்வப்போது வேறு ஒருவனுடம் உடல் உறவு வைத்துக்கொள்வது தெரிந்தும் ஒரு தலையாக காதலிப்பான்.
கதை நகர நகர மேவ் ஓட்டிஸ் மீது காதல் வசப்படுவாள். இதில் காதல் கன்னித்தன்மையை பார்த்து மலரவில்லை. வேறொருவனிடம் உடல் உறவு வைத்தற்காக அவளை இழிவாகவும் நினைக்கவில்லை.
நாம் பார்த்தது வெறும் இரண்டு சீஸன் மட்டும் தான். ஏற்கனவே மூன்றாவது சீஸன் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இது அனைவராலும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
மேற்கத்திய கலாச்சாரத்தை வைத்து எடுத்து இருந்தாலும் கட்டாயம் நாம் அனைவரும் பார்த்து அறிய வேண்டிய பல விசயங்கள் இதில் பேசப்பட்டுள்ளன.