Home சிறப்பு கட்டுரை முதல் காதல்: நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்

முதல் காதல்: நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்

0
533
முதல் காதல் தோல்வி

முதல் காதல்: நீங்காத நினைவும் நிலைக்காத உறவும். தடுக்க இயலாத முதல் காதல் தோல்வி. இளமைப் பருவத்தை ஆட்கொள்ளும் இளம் காதல். அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்.

நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் முதல் காதல் என்ற நிகழ்வை கடந்து செல்லாதவர் எவரும் இல்லை. சிலர் இதை ஏன் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

நம் வாழ்வில் நடக்கும் முதல் அனுபவங்கள் எதையும் நாம் மறப்பதில்லை. அது தந்தையிடம் இருந்து முதல் பரிசு, முதல் நண்பன், பள்ளியில் சாதித்த நிகழ்வுகள் இதுபோல இன்னும் பல.

பெரும்பாலும் முதல் காதல் தோல்வியில் முடியும். நீங்காத நினைவும் நிலைக்காத உறவும் மட்டுமே இது உண்டாகும். ஒரு சிலருக்கு மட்டுமே முதல் காதலே இறுதிவரை செல்லும்.

அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

பள்ளிப்பருவத்தில் 12-13 வயதுகளிலேயே நம்மில் பலருக்கு காதல் வந்து விடும். சிலருக்கு 14-17 இந்த வயதுகளில் வரலாம். அந்த தருணங்களில் அது காதலா? என்பது கூட யாருக்கும் தெரியாது.

முதல் முறை உங்கள் பெற்றவர்களிடம் இருந்து கிடைக்காத ஒரு புதிய அனுபவத்தை நீங்கள் உணர்கிறீர்கள். உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையெல்லாம் மறந்து காதலில் மூழ்குகிறீர்கள்.

எந்த வித எதிர்பார்ப்பும் நோக்கமும் இல்லாமல் இக்காதல் மலர்வதால் இதை மிகவும் சிறப்பாக உணர்வீர்கள். வாழ்க்கை எங்கும் நம்மை எடுத்து செல்கிறது என்று உணராமல் இக்காதல் பயணிக்கும்.

ஆர்வமும் அடைதலும் 

முழுநேரமும் காதலிப்பவரை பற்றிய நினைப்பு, கற்பனை என்று காதலுக்கும் மோகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உன்னை நீயே மாற்றிக்கொள்ளும் தருணம் இது.

புதிதாக ஒன்றை அடையப்போகும் ஆர்வம் உங்களிடையே பெருகி பொங்கிக்கொண்டிருக்கும். காதலன்/காதலி பற்றிய நினைவுகள் சுற்றிச்சுற்றி பட்டாம்பூச்சி போல் பறந்துகொண்டிருக்கும்.

முதல் சந்திப்பு, முதல் பரிசுகள், முதல் சர்ப்ரைஸ், முதல் முத்தம் மற்றும் முதல் கட்டியணைப்பு போன்றவை உங்களை எப்பொழுதும் ஒருவித ஆர்வத்துடன் வைத்திருக்கும்.

இவ்வாறு முதல் முறை அனுபவித்த இந்த நிகழ்வுகள் நம்முடைய மனதில் நீங்கா இடம் பெறுகின்றன. அதிலும் குறிப்பாக மோகம் இதில் முக்கிய இடம் வகிக்கும்.

இளமை பருவத்தை ஆட்கொள்ளும் இளம் காதல்

முதல் காதல் தோல்வி அர்த்தம் தெரியாமல் மலரும் காதல்

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். காதலுக்கும் மோகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஹார்மோன்களின் சுழற்சியால் உங்களை ஆட்கொள்ளும் இக்காதல்.

நம்முடைய இளமைப் பருவத்தை நினைக்கும் பொழுது முதல் காதல் மட்டுமே நினைவுக்கு வரும். மற்ற நினைவுகளையெல்லாம் இது மறக்கடித்து விடும்.

காதல் இறுதி வரை சென்றதோ இல்லையோ? முதல் காதல் என்பது உங்கள் கருத்து, பார்வை மற்றும் செயல்கள்; இவை அனைத்தையும் மாற்றும். இது உங்கள் வாழ்வில் ஒரு பாடமாகக்கூட அமையலாம்.

வாழ்க்கையில் முதல் முறை நிகழும் நிகழ்வுகள் என்றும் நீங்கா எண்ணத்தைப் பெரும். இதன் பிறகு நீங்கள் எத்தனை காதல் செய்தாலும் முதல் காதலின் தடம் அலியா இடத்தைப் பெற்றிருக்கும்.

தடுக்க இயலாத முதல் காதல் தோல்வி

நீங்காத நினைவும் நிலைக்காத உறவும்மிகவும் சிறு வயதில் காதலையும் வாழ்க்கையையும் பற்றி எந்தவித புரிதலும் இருக்காது. இதுவே முதல் காரணம்.

முதலாம் காதல் தவறான நபரிடமே எப்பொழுதும் ஏற்படும். காதலுக்கும் மோகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் நிகழுவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

இது காதல் இல்லை எதிர்பாலினத்தின் மீது உள்ள ஒரு ஈர்ப்பு என்பதை நீங்கள் நீண்ட காலம் கழித்தே உணர்வீர்கள்.

பெருபாலோனோர் காதலிப்பதே காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே. காதலில் விழுவதற்கும் காதலிக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை விரும்பவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

சினிமாவில் பார்க்கும் காட்சிகளை நிஜ வாழ்க்கையில் செய்ய முயற்சிப்பார்கள். ஒவ்வொரு நிகழ்வின் போது எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகமாகுமே தவிர, புரிதல் என்ற ஒன்று அவர்களின் மனதில் நிலைப்பதில்லை.

குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இது காதலை மறந்து ஒருவித பழக்கமாக மாறிவிடுகிறது. பேசுவது, சந்திப்பது மற்றும் நெருங்குதல் இவை யாவுமே காதல் தவிர்த்து பழக்கமாகி விடுகிறது.

முதல் காதல் அனைத்துமே சூழ்நிலைகளால் பிரியும். பெரிதாகக் காரணம் என்றே ஒன்றே இருக்காது. வளர வளர நம்முடைய எண்ணங்களும் கருத்தும் மாறுபடும் இதுவும் ஒரு காரணம்.

முதற்காதல் பிரிவை யாராலுமே தாங்க இயலாது. சிலர் மனதில் புதைத்து வைப்பார்கள். சிலர் இதை அவ்வப்போது கொட்டித் தீர்ப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here