நகை திருடும் பெண் கும்பல்; கோவில் திருவிழா கூட்டங்களே இலக்கு
கோவில் திருவிழா கூட்டங்களில் அடிக்கடி பெண்களின் நகை திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் கோயம்பேத்தூரில் கோனியம்மன் கோவில் தேரோட்டம், கடந்த, 4ம் தேதி நடந்தது.
இதில் கூட்ட நெரிசலில் 35 நபரிடம் 10 சவரன் நகை கொள்ளை போனது. இது குறித்து விசாரணை நடத்திய போலீஸ் சிசிடிவி கேமராவில் சந்தேகத்திற்குரிய 3 நபர்களை பிடித்தனர்.
இணையத்தில் தகவல் சேகரிக்கும் நகை திருடும் பெண் கும்பல்
சென்னை திருவான்மியூரை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி, 36, ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி, 36, பாண்டியராஜன் மனைவி இந்துமதி, 27, ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
இணையத்தின் மூலமும் உறவினர்களான மூவரும், இந்தியா முழுவதும் நடக்கும் கோவில் விழாக்கள் குறித்து இணையதளங்கள் மூலம் தகவல் திரட்டுகின்றனர்.
கூட்ட நெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி நகை திருட்டை செயல்படுத்துகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் நடந்த விழாவிலும் நகை திருடியதை ஒப்புக்கொண்டனர்.