Home நிகழ்வுகள் #CSKvsRR மைதானத்தில் சுருண்டு விழுந்த தோனி; சோடா புட்டியின் கடைசி சிக்சர்

#CSKvsRR மைதானத்தில் சுருண்டு விழுந்த தோனி; சோடா புட்டியின் கடைசி சிக்சர்

3420
0
#CSKvsRR

#CSKvsRR நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி மந்தமாகவே விளையாடியது. இருப்பினும் கடைசி இரண்டு ஓவரில் ரன்களைக் குவித்து நல்ல நிலையை எட்டியது.

20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. பென் ஸ்டோக்ஸ் 28, ஜாஸ் பட்லர்  23, ஸ்ரேயாஸ் கோபால் 19 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.

அதிர்ச்சி அளித்த சிஎஸ்கே

பின்னர் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள்.

பந்து வீச்சு, பீல்டிங், ஸ்டெம்பிங், கேட்சிங் என நொடிப்பொழுதில் கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்பட்டு சிஎஸ்கேவின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பிட்னஸ் இல்லாத அணி சிஎஸ்கே என்பது இன்று மைதானத்தில் கண்கூடாகத் தெரிந்தது. இவ்வளவு திறமையான ராஜஸ்தான் அணி ஒரே ஒரு வெற்றி தான் பெற்றுள்ளதே என சிஎஸ்கே ரசிகர்களையே கண் கலங்க வைத்துவிட்டனர்.

கில்லியாக மாறிய ராயல்ஸ்

அசந்தா காலி என கில்லியாக செயல்பட்ட ரஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வில்லானாக வந்தார் தல தோனி.

4 விக்கெட் வெறும் 24 ரன்கள் எடுத்திருந்த சிஎஸ்கே இதோடு காலி என நினைத்தவர்கள் முகத்தில் கரியைப் பூசினார் தோனி.

ராயுடுவை அரவணைத்துக்கொண்டு தானும் அவ்வபோது அடித்துக்கொண்டு ராஜஸ்தான் இளைஞர்களிடம் சிறு தவறுகூட செய்யாமல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

முக்கியக் கட்டத்தில் ராயுடு விக்கெட் காலி. அதன் பிறகு வந்த ஜடேஜாவிற்கு தைரியத்தைக் கொடுத்து படுத்துக்கொண்டே ஒரு சிக்ஸர் பறக்க வைத்தார்.

19.3 ஓவர் சிஎஸ்கே 144 ரன்கள் எடுத்த நிலையில் தோனியின் விக்கெட் காலி. வெற்றிக்கு 8 ரன்கள் தேவை. பேட்டிங் சிஎஸ்கே பவுலர் சாட்னர்.

கண்ணு இல்லைனாலும் சிக்சர் பறக்கும்

சோடா புட்டி கண்களுடன் மைதானத்திற்குள் வந்தார். இவர் சிஎஸ்கே-வை காப்பாற்றுவாரா என அனைவர் கண்களும் விரிந்தது.

கடைசி பால் மிச்சம் இருக்க வரைக்கும் சிஎஸ்கே பவுலருக்கு கண்ணு கூட சரியா தெரியலைனாலும், அவனாலயும் சிக்ஸர் பறக்க விட முடியும் என கெத்துக்காட்டிவிட்டார் சாட்னர்.

கில்லியை பல்லியாக மாற்றிய ஸ்டோக்ஸ்

19-வது ஓவர் வரை எந்த ஒரு சின்ன தவறு கூடச் செய்யாமல் சிறப்பாக செயல்பட்ட ராயல்ஸ் அணியை தோல்விக்கு வித்திட்டவர் பென் ஸ்டோக்ஸ்.

ஒய்டு, நோபால் என எக்ட்ரா ரன்கள் கொடுத்தது ஒரு முக்கிய காரணம். இருப்பினும் கடைசி பாலில் கூட ஜெயித்திருக்கலாம். கோட்டை விட்டுவிட்டார்.

ராசியில்லா ராஜஸ்தான்-பெங்களூரு

என்னதான் 6 பாலுக்கு 6 விக்கெட் எடுத்தாலும் ராஜஸ்தான்-பெங்களூரு அணிகள் வெற்றியை ருசிப்பது கடினமே. இந்த சீசன் அவர்களுக்கு மிக மோசமான சீசன்.

கண் கலங்க வைத்த தல

ஒரு கட்டத்தில் எம்.எஸ்.தோனியால் ஓடமுடியாமல் மைதானத்திலேயே படுத்துவிட்டார். நமேக்கே அவரின் தனி மனித போராட்டத்தைக் கண்டு கண்களில் தண்ணீர் வந்துவிட்டது.

கர்ஜித்த தல தோனி

அம்பயர் நோபால் கொடுத்துவிட்டு இன்னொருவர் இல்லை என்றதும் மீண்டும் மைதானத்திற்குள் கர்ஜனை செய்ததில் ஓட்டு மொத்த மைதானமே அதிர்ந்தது.

கடைசியாக தல தோனிக்கே மேன் ஆப் தி மேட்ச் கொடுத்து சிறப்புடன் கவுரவித்துவிட்டது ஐபிஎல் கமிட்டி.

லீக் போட்டியே வேர்ல்ட் கப் பைனல் மேட்ச் மாதிரி இருந்தால் அப்போ பைனல் மேட்ச் சொல்லவா வேண்டும்? அதற்குமுன் மும்பையை பழிவாங்கும் நாளுக்காக காத்திருப்போம்.

Previous articleடிடிவி தினகரனுடன் கள்ளக்கூட்டணி அமைக்க முயன்ற பாஜக
Next articleCSK vs RR: மங்குனி அம்பயரை அரட்டிய தோனி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here