Home நிகழ்வுகள் உலகம் Coronavirus : 17000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Coronavirus : 17000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

649
0
CORONAVIRUS : சீனாவின் வுஹான் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17000 ஆக உயர்ந்துள்ளது Coronavirus Death rate

Coronavirus : கொரோனா வைரஸ் தற்போது பல உலகநாடுகளை உலுக்கிக்கொண்டிருக்கிறது. சீனாவின் வுஹான் (WUHAN) மாகாணத்தில் தோன்றிய இந்த வைரஸால் தற்போது உலகம் முழுவதும் (Coronavirus Death rate) 362 பேர் இறந்தும், 17000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

CORONAVIRUS how it came : கொரோனா வைரஸ் எப்படி வந்தது?

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பலர் பாதிப்புக்குள்ளான நிலையில், இது எந்த வழியில் மனிதர்களைத் தாக்கியிருக்கக்கூடும் என்று பல அறிஞர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

சமீபத்திய ஆய்வு அறிக்கையின்படி இந்த கொரோனா வைரஸ் (CORONA VIRUS) விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்றும் அதிலும் குறிப்பாக வௌவால்லின் மூலம் பரவியிருக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பொதுவாகவே சீனாவில் (CHINA) பல விலங்குகளின் மாமிசங்களை உட்கொள்ளும் பழக்கம் வழக்கமானது.

அப்படி சீனாவின் வுஹான் மாகாணத்தில் (WUHAN) இருக்கும் மிகப்பெரிய விலங்கு சந்தையின் மூலம்தான் முதல் முதலாக மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது.

How the Coronavirus Spread? கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உடம்பில் இருக்கும் வைரஸ் நிறைந்த நீர், அவர்களின் தும்மல் மற்றும் இருமல் போன்ற நேரங்களில் வெளியில் சிதறுவதன் மூலம் பரவியது என்று கூறுகின்றனர்.

அதோடு மட்டுமல்லாமல் அவர்களின் எச்சில் மூலமும் பரவுகின்றது என்று ஆராய்ச்சி ஒருபுறம் செய்து கூறிவருகின்றனர்.

Coronavirus Symptoms? கொரோனா வைரஸ்ஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதலில் உடலசதியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படும், பின்னர் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வருமாம்.

இந்த சாதாரண அறிகுறிகள், தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.

Why Coronavirus more Dangerous? கொரோனா வைரஸ் ஏன் மிகவும் கொடியது?

உலகில் இருக்கும் பல வகையான வைரஸ் ஏற்படுத்தும் சாதாரண காய்ச்சல் மற்றும் இருமலை ஏற்படுத்துகின்ற இந்த கொரோனா வைரஸ் (CORONAVIRUS), ஏன் இவ்வளவு கொடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று பலர் வியக்கின்றனர்.

கொரோனா வைரஸ் மனிதர்களின் சுவாசமண்டலத்தை பெரிதும் பாதிப்புக்குள்ளாகக்கூடியது. இந்த வைரஸ் முதலில் சளி மற்றும் இருமல் போன்றவைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நுரையீரலில் தொற்றை ஏற்படுத்தி விடும்.

இதனால் சுவாசிப்பதற்கு சிரமமாக இருக்கும் வேளையில், சிறுநீரகத்தை முழுவதுமாக செயலிழக்க செய்துவிடுகின்றன இந்த கொடிய வகையான வைரஸ்கள்.

ஒரே நேரத்தில் நுரையீரல் மற்றும் சிறுநீரகத்தையும் (Multi Organ Failure) செயலிழக்க செய்வதால் இந்த கொரோனா வைரஸ் மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.

Coronavirus Death Rate: கொரோனா வைரஸால் இதுவரை இறந்தவர்கள்

முதலில் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் (Coronavirus), தற்போது நாடுமுழுவதும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய கணக்கெடுப்பின்படி உலகில் மொத்தமாக 17387 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சீனாவில் 361 பேர் இந்த கொரோனா வைரஸினால் இறந்துள்ளனர். முதல் முதலாக சீனாவை விட்டு வெளிநாட்டில், பிலிபைன்ஸ் நகரத்தில் 44 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.

Corona virus Cure: கொரோனா வைரஸிற்கான மருந்து

உலக நாடுகள் முழுவதையும் அசச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸிற்கு இன்று வரை சரியான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இருப்பினும் தற்போது ஆய்வாளர்கள் எய்ட்ஸ் நோய்க்கு பயன்படுத்தும் மருந்தோடு ஒரு சில மருந்துகளைச் சேர்த்து, கொரோனா வைரஸினால் (Coronavirus) பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த மருந்து மூலம் கொரோனா வைரஸினால் ஏற்பட்ட தொற்றிலிருந்து மக்கள் மெதுவாக குணமடைந்து வருவதாக ஹாங்காங் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Previous articleரஞ்சித் பச்சன் சுட்டுக்கொலை: Ranjit Bachchan Murder
Next article#ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்: மோசமான ட்ரெண்ட்ங்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here