பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாநிலங்கள் பல்வேறு நகரங்களுக்கு நேரடியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவ்வாறு பிரதமர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கும்போது கூடவே பெரிய பெரிய கருப்பு பெட்டிகளும் வந்து இறங்குகின்றது.
தமிழகத்தில் ராமநாதாபுரம், கோயம்புத்தூர் தொகுதிகளில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய உடன் சிறிது நேரத்தில் இரண்டு கருப்பு பெட்டியை இறக்கிச் சென்றுள்ளார்.
அந்தப் பெட்டியில் 200 கோடி வந்து இறங்கி உள்ளதாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பல பாஜக தொண்டர்கள் அப்போது கூறினார்கள்.
அதேபோல் கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று முன்தினம் நரேந்திர மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அங்கும் இதே போன்று ஒரு கருப்பு பெட்டி விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு உள்ளது. இதை ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அந்த பணம் ஒரு காரில் ஏற்றப்பட்டு உள்ளது. அது பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு வந்த கார் இல்லை எனவும் உறுதியாக் கூறியுள்ளனர்.
ஓவ்வொரு ஊரிலும் சில மணிநேரங்களே தங்கிப் பிரச்சாரம் செய்யும் மோடி உடைகள் கொண்டு செல்ல வாய்ப்பு இல்லை. அதுவும் ஒரு சூட்கேஸ் நிறைய கொண்டு செல்ல வாய்ப்பே இல்லை.
எனவே அதில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பிரதமர் தன்னுடைய வாகனத்திலேயே பணத்தை கடத்திக்கொண்டு சென்று விநியோகம் செய்கிறார் என காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடமும் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆளும் கட்சிக்கு தேர்தல் ஆணையம் சாதகமாக நடந்து கொள்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.