Home Latest News Tamil தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று

சென்னை: சனிக்கிழமை தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு, 938 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.

இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்தது

இதனால், தமிழ்நாட்டின் மொத்த கொரோனா எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 6 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். கொரோனாவால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு குறித்து நிபுனர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த சிறிது நேரம் பிறகு சென்னையில் புதிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மேலும் 616 அதிகரித்தது. இதை தொடர்ந்து சென்னையில் மொத்த கொரோனா எண்ணிக்கை 13,980 ஆக உள்ளது.

செங்கல்பட்டில் புதிதாக 94 கொரோனா தொற்று

சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் 94 புதிய கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 22 தொற்றுகளும் மற்றும் திருவள்ளூரில் 28 கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமை குவைத்தில் இருந்து திருவனந்தபுரம் வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து வந்த 2 பேருக்கும், சண்டிகரில், குஜராத் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலத்தில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் தொடர்வண்டி மற்றும் சாலை வழியாக வந்த 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் மராட்டியத்திலிருந்து வந்த 46 பேருக்கும், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த 12 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த 6 பேருக்கும், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் கர்நாடகத்தில் இருந்து தலா இரண்டு பேருக்கும் மற்றும் ஆந்திரா, அசாம், டெல்லி மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய 134 பேருக்கு கொரோனா தொற்று

இதுவரை வெளிநாட்டிலிருந்து திரும்பிய 134 பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து திரும்பிய மற்றும் தொடர்வண்டி நிலையத்தில் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ள 195 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here