டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்
டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆம்ஆத்மி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறது.
பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
சட்ட மன்றத் தேர்தல்
70 தொகுதிகளில் கடந்த 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 62 இடங்களில் முதலிடம் பிடித்துள்ளது ஆம்ஆத்மி கட்சி.
இதர கட்சிகள் பின்னடைவு
மும்முனை போட்டி நடைபெற்ற நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பயங்கர பின்னடைவை சந்தித்துள்ளது.
மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களை ஆம் ஆத்மியும் 8 இடங்களில் பாஜகவும் முதலிடம்.
இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில் பாஜகவிற்கு அந்த 8 இடங்களும் நிலைக்குமா என்பது தெரியவில்லை.
ஆம் ஆத்மி அலுவலகத்தில் கொண்டாட்டம்
மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாட்டம் 3-வது முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்க போகிறது ஆம்ஆத்மி.
டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் மிகப்பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாராட்டுகள்
டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிவினை அரசியலில் ஈடுபட்டவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் தெரிவித்தார்
நன்றி தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
ஆம்ஆத்மி கட்சிக்கு பரப்புரை வியூகங்களை வகுத்து கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “இந்தியாவின் ஆன்மாவை காப்பாற்றியதற்கு நன்றி” என்று ட்விட் செய்துள்ளார்.
இனிப்புகளை பகிர்ந்து ஆம்ஆத்மி தொண்டர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.