Home Latest News Tamil திமுகவிடம் மண்டியிட முயல்கிறதா தேமுதிக?

திமுகவிடம் மண்டியிட முயல்கிறதா தேமுதிக?

571
0
திமுகவிடம்
picture credit: google

திமுகவிடம் மண்டியிட முயல்கிறதா தேமுதிக?

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்தபோது, அடுத்த தலைமுறை முதல்வர், பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் தனித்து நின்று, மற்ற கட்சிகளை அசர வைத்தார். ரஜினி வருவார் வருவார் எனக் காத்திருந்த நேரம் விஜயகாந்த் களத்தில் குதித்தார்.

இதனால், ரஜினி ரசிகர்களே பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஜெயலலிதா முதல்வராகியது விஜய்காந்த் மூலமே.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்தது. தேர்தல் முடிவில் ஜெயலலிதா முதலமைச்சரானார். விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார்.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க முயன்றது திமுக. பழம் நழுவி பாலில் விழவில்லை.

இரவு கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு காலையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துவிட்டார்.

விஜயகாந்தை திமுகவுடன் சேரவிடாமல் இறுதி நிமிடத்தில் மக்கள் நலக்கூட்டணிக்குள் இழுத்தனர். இதனால் அத்தேர்தலில், தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு.

திமுகவும் தோல்வியைத் தழுவியது. திமுக, தேமுதிக இருகட்சிகளின் வாக்குகளைச் சேர்த்தால் அதிமுகவைவிட அதிகம். விஜயகாந்தின் தவறான முடிவால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார்.

இந்த தேர்தலில் அவரை மேடையில் காண்பதே அரிது. அவரால் சுத்தமாக பேசமுடியவில்லை. ஞாபக மறதியும் அதிகமாகிவிட்டது. எனவே இனி அவர் மேடையில் தோன்றுவது சாத்தியமில்லை.

பொங்கல் பரிசைக்கூட, விஜயகாந்தின் மகனே மேடையில் தோன்றி தேமுதிக தொண்டர்களுக்கு வழங்கினார்.

இம்முறை அதிமுக கட்சியே இரண்டாகப் பிளந்து ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பெரிய கட்சி என்றால் திமுக என்ற ஒற்றை மரமே கண்ணில் தென்படுகிறது.

அதிமுக நிலைக்குமா? என்பது தேர்தலுக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும். எனவே, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கலாம் என யோசித்து வருகிறதாம்.

பாஜக கூட்டணிக் கதவுகள் திறந்தே உள்ளது எனக் கூறினாலும், அக்கட்சியுடன் தேர்தலை சந்திக்க தேமுதிக விரும்பவில்லை.

திமுகவே வரும் தேர்தலில் வெற்றி பெரும் என கருத்துக்கள் நிலவி வருகிறது. இதனால் திமுகவுக்கு, சுதீஷ் தூது அனுப்பி வருகிறாராம்.

நேரடியாக கேட்டால் மனம்போய்விடுமோ எனக்கருதி காங்கிரஸ் கட்சி மூலம் தூது அனுப்பி உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி கூட தேமுதிகவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

திமுக கட்சி தேமுதிகவை கெஞ்சிய காலம்போய்…. தேமுதிக கட்சி திமுகவிடம் மண்டியிடும் காலம் வந்துவிட்டது.

அரசியலில் எதுவம் நிரந்தரமில்லை என்பதற்கு இதுவே சான்று.

Previous articleவரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ்
Next articleஅஜித்திடம் தோற்றுவிட்டோமே: மனக்குமுறலில் ரஜினி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here