Home Latest News Tamil ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும் பயனும் என்ன?

ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும் பயனும் என்ன?

595
0
ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும்

ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும் பயனும் என்ன? கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது, ஊரடங்கு சட்டத்தின் நோக்கம்

ஊரடங்கு சட்டத்தை பற்றி பேசுவதற்கு முன் கொரோனா எவ்வாறு பரவுகிறது  வீரியம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா எந்த அளவிற்கு ஆபத்தானது 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு குறைந்தது 5 நாட்கள் கழித்தே அறிகுறி தென்படலாம். ஒரு சிலருக்கு 10 நாட்கள் கழித்து கூட அறிகுறி தென்படுகிறது.

இதுபோன்ற தருணங்களில் அவர் மற்றவர்களுடனோ அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ நேரம் செலவிடும் பொழுது அவருக்கு அருகில் இருந்த நபர் என ஒவ்வொருவராக பரவக்கூடும்.

இது ஒரு சங்கிலி தொடர் போன்று பரவக்கூடியது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக  உள்ளவர்களே முதலில் பாதிக்கப்படுகின்றனர்.

மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவும் தன்மை கொண்டுள்ளது. சீனாவில் பரவிய வேகம் உங்களுக்கு தெரியும். அதைவிட இத்தாலி சிறிது மெத்தனமாக இருந்ததால் அது படும் பாடை பார்த்தாலே புரியும்.

சீனாவை விட அதிக இறப்பு விகிதம் இத்தாலியில் ஏற்பட்டுள்ளது என்பதை தாங்கள் தினசரி செய்தி படித்தாலே தெரியும். இதுவரை 3,00,000 பாதிக்கப்பட்டுள்ளனர், 13000 நபர்களுக்கு மேல் உயிரழந்துள்ளனர்.

அதிர்ச்சி ரிப்போர்ட் : கொரோனா வைரஸ் எத்தனை நாள் வாழும்

ஊரடங்கு சட்டத்தின் நோக்கம் 

கொரோனா பரவும் சங்கிலி தொடரை உடைப்பதே இதன் ஊரடங்கு சட்டத்தின் நோக்கமும். அனைவரும் எங்கும் பயணம் செய்யாமல் வீட்டில் இருப்பது அதன் வேகத்தை குறைக்கும்.

உலோகத்திலோ துணியிலோ அல்லது பிற இடங்களிலோ சில மணி நேரங்களில் இருந்து பல நாட்கள் வரை உயிரோடு இருக்கும் தன்மை கொண்டது. ஆராய்ச்சி இன்னும் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டின் கொரோனா பரவிய வேகத்தை ஒவ்வொரு வாரமாக கணக்கெடுத்தால் நான்காம் வாரத்தில் அது பரவிய வேகத்தை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

இத்தாலியில் ஐந்து வாரத்திற்கு 3, 152, 1036, 6362, 21157 இத்தனை மடங்கில் அதிகரித்துள்ளது. இந்தியாவில் 3, 24, 105, 315 வரை நான்கு வாரத்திற்கு பரவியுள்ளது.

அடுத்த வரும் வாரங்களில் மிக தீவிரமாக பரவும் இதனால் சுய தனிமைப்படுத்துதல் மிக அவசியமான, தவிர்க்க இயலாத ஒன்று.

இந்நேரத்தில் அனைவரும் சுய தனிமைப்படுத்தல் நல்ல முடிவு தான். ஆனால் இதுவே தீர்வு இல்லை. தேவையில்லாத பயணங்களை குறைப்பது மிகவும் நல்லது.

ரயிலில் விமானத்தில் பயணம் செய்த பெரும்பாலோனோருக்கு மிக எளிதாக கொரோனா பரவுகிறது. எனவே விமானம், ரயில், பஸ் சேவைகளை நிறுத்தியது ஒருவகையில் நல்லது.

இதை ஒரு நாள் மட்டும் இல்லாமல் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது மிகவும் அவசியம். பணத்தை விட உயிர் மிகவும் அவசியம்.

வருவாய் பாதிக்கும் என வேலைக்குச் சென்று கொரோனா பரப்பி முற்றிலும் இறப்பதை விட, ஒரு வாரம் அமைதியாய் இருந்து பூரண ஆயுள் பெறுவதே சிறந்தது.

இதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு மீண்டும் கொரோனாவுடன் உரை வலம் வந்தால், இந்தியா அதிலிருந்து மீண்டு வர 6 மதமாவது ஆகும்.

அதுவும் சீனாவை போன்று மிகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே. எனவே இதற்கு முதலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இந்த நோயை விரட்ட ஒன்று கூடுவதை தவிர்த்துவிட்டு தனிமை படுத்திக்கொண்டாலே பேதும், அதுவே தன்னால் அழிந்துவிடும்.

Previous articleXiaomi Mi 10pro review tamil (108MP | SD865 | 12GB RAM) – இந்தியாவிற்கு வந்துருச்சு!!!
Next articleகொரோனா கப்பலை வரவேற்ற கியூபா – மனிதம் வென்றது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here