Home நிகழ்வுகள் இந்தியா தகிக்கும் கர்நாடகா: இடஒதுக்கீடு கோரி முழு அடைப்பு

தகிக்கும் கர்நாடகா: இடஒதுக்கீடு கோரி முழு அடைப்பு

251
0
தகிக்கும் கர்நாடகா

தகிக்கும் கர்நாடகா:  இடஒதுக்கீடு கோரி முழு அடைப்பு

கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளில் கன்னட மொழி பேசும் மக்களுக்கு 70 சதவீதக்கும் மேல்  இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி  கன்னட அமைப்புகளின் சார்பில் இன்று முழு அடைப்பு நடைபெற்று வருகிறது .

மகாராஷ்டிரா & ஆந்திரா முன்னுதாரணம்

ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள தனியார் துறை வேலை வாய்ப்புகளில் தெலுங்கு பேசும் மக்களுக்கு சுமார் 90 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அண்மையில் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி நிறைவேற்றி வரலாறு படைத்தார்.

எனினும் இதற்கு முன்னரே மகாராஷ்டிரா மாநிலத்தில் இதே மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது .

பாமக கோரிக்கை

தமிழ்நாட்டிலும் பல பாமக உள்ளிட்ட பல அமைப்புகளும் தமிழக வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து அறிக்கைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன .

இந்த நிலையில்தான் சமீப காலமாக கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகள் கன்னடர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன .

அண்மையில் தான் கர்நாடக அரசு தன்னுடைய மாநிலத்துக்கென்று ஒரு எம்பளம் மற்றும் கொடியையும் அறிமுகப்படுத்தி இருந்தது நினைவு கூறத்தக்கது .

முழு அடைப்பு போராட்டம்

கர்நாடகாவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக தலைநகர் பெங்களூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது எனினும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

கர்நாடாவில் கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு எந்த வித முன் அனுமதியும் இதுவரை பெறப்படவில்லை என பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பாஸ்கர்ராவ் கூறியுள்ளார்

மேலும் பேசிய அவர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் அதே வேளையில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாட்டை பாதிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளார்.

மேலும் ரயில் நிலையத்திலிருந்து சுதந்திர பூங்கா வரை போராட்டக்கார்கள் பேரணி செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர், பேரணியின் போது பொது சொத்துக்களுக்கு எந்தவித பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு தாங்கள் முழுப்பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்

எனினும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கிவருகின்றன என்று அம்மாநில துணை முதல்வர் லட்சுமணன் ஸ்வதி அறிவித்துள்ளார்.

இந்த முழு அடைப்பின் காரணமாக கர்நாடக செல்லும் தமிழகப் பேருந்துகள் கர்நாடக எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டு திரும்பி வருகின்றன

கர்நாடக போராட்டம் சுமூகமாக நடந்து முடியும் பட்சத்தில் தமிழகத்திலும் இந்த போராட்டம் பரவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கர்நாடகாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் நாளடைவில் தமிநாட்டிலும் வெகு ஜன போராட்டமாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏற்கனவே ரயில்வே துறையில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என ஒரு சில அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது

கர்நாடகாவில் போராட்டங்கள்

கர்நாடகாவில் சமீப காலங்களாக பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

குடியுரிமை சட்ட எதிர்ப்பு , காவேரி பிரச்சினை, மேகதாது அணைப்பிரச்சினை, அரசியல் குழப்பங்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தகித்து வருகிறது என்றால் மிகை ஆகாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here