கொரோனா வைரஸ் தொற்று, பொருளாதாரம் மற்றும் மக்களின் சாதாரண வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகெங்கிலும் ஏராளமான இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அரசாங்கங்கள் மக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில், வைரஸ் தாக்கமும் மிக அதிகரித்துள்ளது, மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நட்சத்திரங்கள் கூட விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி வருகின்றனர், இப்போது டோலிவுட் ஹீரோ விஜய் தேவரகொண்டா ஒரு ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவின் ட்வீட் “என் அன்பானவர்களே, நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். துணியின்மூலம் முகம் மூடுவது மெதுவாக நோய் பரவாமலிருக்க உதவும். மருத்துவர்களுக்கான மருத்துவ முகமூடிகளை அவர்களுக்கு விட்டுவிட்டு, அதற்கு பதிலாக ஒரு கைக்குட்டையோ, ஒரு ஸ்கேர்ப் போன்ற துணிகளை பயன்படுத்தவும். உங்கள் முகத்தை மூடி,பாதுகாப்பாக தங்கவும். #MaskIndia ” என அவரின் டீவீட்டரில் பதிவிட்டிருந்தார்.
My loves,
Hope you are all staying safe🤗Cloth face covering will help slow disease spread.
Leave the medical masks for doctors and instead
Use a handkerchief
Use a scarf or
Use your mom's Chunni.Cover your face, stay safe.#MaskIndia pic.twitter.com/8Zv2uNdP5a
— Vijay Deverakonda (@TheDeverakonda) April 7, 2020