Home நிகழ்வுகள் இந்தியா வடகிழக்கு டெல்லி கலவரம் – துணை ராணுவம் குவிப்பு

வடகிழக்கு டெல்லி கலவரம் – துணை ராணுவம் குவிப்பு

548
0
வடகிழக்கு டெல்லி கலவரம் - துணை ராணுவம் குவிப்பு

வடகிழக்கு டெல்லி கலவரம் – துணை ராணுவம் குவிப்பு. குடியுரிமை சட்டத்திற்கு அதரவு, எதிர்ப்பு தெரிவித்து இரு மதங்களுக்கு இடையே சண்டை மூண்டுள்ளது.

இரு மதங்களுக்கு இடையே சண்டை

இரு மதங்களுக்கு இடையே சண்டைகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கும் சட்டதிருத்தை ஆதரிப்பவர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் பெரும் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது.

வடகிழக்கு டெல்லி கலவரம் மூலம் இதுவரை 18  பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை:

இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கிய வன்முறை தற்போதுவரை தொடர்ந்து வருவதாக தெரிகிறது.  இந்த வன்முறை சம்பவத்தில் பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வன்முறை தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனை முடிவில், கூடுதல் காவல்துறையினரை குவிக்க முடிவெடுத்துள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருந்தாலும் வன்முறைகள் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்த வண்ணம் இருப்பதால் அப்பாவி மக்களிடையே பதற்றமும் அச்சமும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த CBSE தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடிய தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தொடர்வதற்கு காரணம் நேற்று முன்தினம் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகள் குறித்த விடியோக்கள் இணையதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டது.

மேலும், சில விஷமிகளால் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதும் ஒரு காரணமாகும் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ராணுவம் குவிப்பு

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்த 35 துணை ராணுவப்படைகள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சிறப்பு படை, குற்றப்பிரிவு மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவு அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

முன்னதாக டெல்லி முதல்வர் டெல்லி சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு களமிறங்கியுள்ளது .

நேற்று அதிகாலை மீண்டும் வன்முறை மவுஜ்புர் மற்றும் பிரம்மபுரி ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக்கு டெல்லி சட்டமன்றம் நேற்று கூடி வன்முறையைக் கண்டித்துள்ளது.

எனினும் பிரச்சினை முடியாத வகையில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம்:

அண்மையில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டம், குறிப்பிட்ட ஒரு மதத்தினருக்கு எதிராக இருப்பதாக கூறி சட்டம் நிறைவேறிய நாள் முதல் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.

குறிப்பாக டெல்லி தமிழகம் மேற்கு வங்காளம் கேரளா போன்ற மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஷாகீன் பா பகுதியில் போராட்டக்காரர்கள் ஒன்றாக குழுமி தொடர்ந்து போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தினை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

என்னதான் பிரச்சினை

குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தில் அண்டை நாடுகளான பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டு அகதிகளாக இந்தியாவுக்கு வருகை புரிபவர்களில், இஸ்லாமியர்களை தவிர மற்ற மதத்தினருக்கு இந்தியக் குடியுரிமை நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என்பதாகும்.

இதனாலேயே இதுகுறித்த சட்டம் இன்று வரை சர்ச்சையாகி வருகிறது என்பது நினைவு கூறத்தக்கது.

பிரதமர் மோடி  அழைப்பு

டெல்லியில் நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி  அனைத்து தரப்பு மக்களும் அமைதிக்காக்க முன் வர வேண்டும் என ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே டெல்லி வன்முறையைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here