Home Latest News Tamil அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய தபால்வண்டி – இந்தியாபோஸ்ட் சேவையினை பாராட்டிய மத்திய அரசு

அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய தபால்வண்டி – இந்தியாபோஸ்ட் சேவையினை பாராட்டிய மத்திய அரசு

357
0
அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய தபால்வண்டி - இந்தியாபோஸ்ட் சேவையினை பாராட்டிய மத்திய அரசு

India post : கொரோனாவின் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கில் இருக்கும்போது, அவசரத்திற்கு ஆம்புலன்ஸாக மாறிய இந்தியாபோஸ்ட் வண்டிகள் பல மருத்துவக்கருவிகளை நாடுமுழுவதும் எடுத்துசென்றுள்ளன. கொரோனவைரஸ் பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அவசரகால சூழ்நிலையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகளை நாடுமுழுவதும் கொண்டுசெல்வது மத்திய அரசிற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.
ஆனால் அந்த கடினத்தை தன்கையில் எடுத்துக்கொண்டு நாடு முழுவதும் ஆம்புலன்ஸில் செல்ல வேண்டிய மருத்துவக்கருவிகளை இந்தியாபோஸ்ட் தபால் வண்டிகள் மூலம் சரியான நேரத்திற்கு கொண்டுசேர்த்துள்ளது இந்தியாபோஸ்ட்.
நாடுமுழுவதும் இருக்கும் பல மக்களுக்கு அவர்கள் பென்சன் பணம் முதல் அவர்களுக்கு வந்திருக்கும் தபால்களை வழங்கும் வேலையினை மட்டும் பார்க்காமல், இப்படிப்பட்ட முக்கியமான காலகட்டங்களில் அரசிற்கு உதவியதை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் கூறுகையில், 100 டன்னுக்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாபோஸ்ட் வாயிலாக நாடுமுழுவதும் பல இடங்களுக்கு சரியான நேரத்தில் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் மற்றும் இந்தியாபோஸ்ட் வங்கியில் பணம் வைத்திருந்தவர்கள் எளிதில் எடுப்பதற்காக, நாடு முழுவதும் பல இடங்களில் நடமாடும் வங்கிகள் செயல்படுவதாக கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட கடுமையான காலங்களில் மக்களுக்கும் அரசிற்கும் பெரிய உதவிகளை செய்துவரும் இந்தியபோஸ்டினை பலர் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here