மும்மை: இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைத்துலக நாணய நிதியம்”( International Monetary Fund -IMF) வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள் காட்டி
இந்தியா அனைத்து ஜி-20 நாடுகளை காட்டிலும் மொத்த உள்நாட்டு உர்பத்தியின் (GDP) வளர்ச்சிவிகிதம் அதிகமாகவே உள்ளதாகவும், இது தற்ப்போது 1.9 சதவிகிதத்தில் உள்ளதெனவும் தெரிவித்தார்.
2021-2022 இல் 7.4 சதவிகிதத்தை எட்டும்!
அனைத்துலக நாணய நிதியத்தின்(IMF) கூற்றில் இந்த வளர்ச்சி வரும் 2021-2022 இல் 7.4 சதவிகிதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் அவர் செவ்வாய் கிழமை கூறுகையில் உலகம் தற்போது கோவிட்-19 பரவலாலும் ,ஊரடங்கு உத்தரவுகளாலும் எப்பொழுதும் இல்லாத மோசமான
பொருளாதார இழப்புகளை உலகம் சந்தித்திருப்பதாகவும் தற்போதுவரை 9 ட்ரில்லியன் டாலர் அளவில் இந்த இழப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த அளவு ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் பொருளாதாரங்களை ஒன்று சேர்த்து ஒப்பிடும் பொழுது அதை விட அதிகம் என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தற்போது உள்ள நிலவரப்படி ஒரு சில நாடுகள் மட்டுமே வளர்ச்சி விகிதத்தில் உள்ளதெனவும் அதில் இந்தியாவும் ஒன்று எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் மோட்டார் வாகன உற்பத்தித்துறை மற்றும் வாகன விற்பனை கடுமையான பாதிப்பை சந்தித்திருப்பதாகவும் மின்சாரத்தேவையில் குறைவு ஏற்பட்டிருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.