80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள். ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டதாக சந்தேகித்து 80 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் கொரோனா
நேற்று வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன அந்தந்த மாநில அரசுகள்.
ஹைதராபாத் மென்பொறியாளர்
துபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கான மாநிலத்திற்கு வந்த மென்பொறியாளர் கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பூனே ஆய்வுக்கூடமும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தது. இதனால் அவர் சிறப்பு கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
80 பேருக்கு கொரோனா பாதிப்பா?
இந்நிலையில் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அவர் பயணம் செய்த பேருந்தில் உடன் பயணம் செய்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 80 பேரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
அவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.