Air India : நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா காரணமாக அனைத்து விமான சேவையையும் நிறுத்தி வைத்திருந்தது ஏர் இந்தியா.
வரும் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவு பெறுவதால், ஏர் இந்தியா ( Air India ) விமான சேவைகள் எப்போது இயங்கும் என்ற தகவல்களை கூறியுள்ளது.
மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு சேவைகள் அனைத்தும் இயங்கும் எனவும், அதன்பின்னும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் நகரங்களுக்கான சேவைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஜூன் 1 முதல் வெளிநாட்டு சேவைகள் அனைத்தும் தொடங்கும் என்று அந்நிறுவனத்தின் செயலாளர்கள் கூறியுள்ளனர்.
ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பினை தொடர்ந்து மற்ற விமான சேவைகளும் எப்போது துவங்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.