அலோக் வர்மா ராஜினாமா செய்தது ஏன்? அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்.
சி.பி.ஐ. இயக்குனராக பதவி வகித்த அலோக்குமார் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அலோக் வர்மா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அலோக் வர்மா கட்டாய விடுப்பு வழக்கை விசாரித்த நீதிபதிகள், வர்மா தொடர்ந்து பணிபுரியலாம். அவரைக் கட்டாய விடுப்பில் அனுப்ப யாருக்கும் அதிகாரம் கிடையாது எனத் தீர்ப்பளித்தனர்.
இத்தீர்ப்பை தொடர்ந்து, மோடி தன்னுடைய இல்லத்தில் நியமனக்குழுவைக் கூட்டினார். அதில் பிரதமர் மோடி, நீதிபதி ஏ.கே.சிக்ரி, எதிர்கட்சி சார்பில் மல்லிகார்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து ஆலோக் வர்மாவை நீக்குவது எனவும் அதற்கு பதிலாக தீயணைப்பு துறையின் இயக்குனராக நியமிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அலோக் வர்மா தீயணைப்பு துறை இயக்குனர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மத்திய பணியாளர் செயலகத்துக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு, “இன்றோடு தன்னுடைய பணிக்காலம் முடிந்துவிட்டதாக கொள்ளுங்கள். இயக்குனர் பதவிக்கான வயது வரம்பை, நான் ஏற்கனவே கடந்துவிட்டேன்” என எழுதியுள்ளார்.