60000-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. இந்தியாவில் தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே உள்ளது.
இந்தியா: உலகையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா எனப்படும் கோவிட்-19 நோய் இந்தியாவிலும் அதிக அளவில் பரவி வருகிறது. ஊரங்கில் தளர்வுகள் அமலானது முதல் இதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.
கொரோனாவிற்கு இதுவரை இந்தியாவில் 1,981 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 இறப்புகள் பதிவாகியுள்ளன. புதிய நோய் தொற்றுகள் 3,320 ஆக பதிவாகியுள்ளன.
இந்தியாவில் 39,834 பேர் நோய் தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 17,846 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 111 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள். வெள்ளிக்கிழமை மட்டும் காலை முதல் மாலை வரை மொத்தம் 95 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிராவில் 37, குஜத்தில் 24, மேற்கு வங்கத்தில் 9, மத்திய பிரதேசத்தில் 7, ராஜஸ்தானில் 1, உத்திரபிரதேசத்தில் 1, ஆந்திரா 3, தமிழ்நாட்டில் 3, டெல்லி 2,
பஞ்சாப் 1, ஹரியானா 1 என இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் இந்த பாதிப்பு கொரோனாவை தடுக்கும் பணிகளில் இன்னும் தீவிரம் தேவை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.
சீனாவின் வுஹான் மாகாணத்திலிருந்து கடந்த டிசம்பர் இறுதியில் பரவியது கொரோனா வைரஸ். இது பல உலக நாடுகளில் பரவி இன்று வரை ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரை தடுப்பு மருந்துகளோ அல்லது சரியான சிகிச்சை முறைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளுமே இதற்கான மருந்து கண்டுபிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.
மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை மக்கள் அரசின் உத்தரவுகளை தீவிரமாக கடைபிடித்து தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டும்.