பாதித்தோர் 500, பலியானோர் 10; கொரோனா இந்தியா அப்டேட், தமிழ்நாட்டில் 144 தடை, மதுரை மக்கள் பீதி. corona india, tamilnadu news.
இந்தியாவில் கொரோனோவால் பாதித்தோர் எண்ணிக்கை கணிசமாகவே அதிகரித்து வருகிறது. நேற்றுடன் பாதித்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது.
இதுவரை இந்தியாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 380000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 30 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் லாக் செய்யப்பட்டது. ரயில் விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் இன்று மாலையிலிருந்து 144 தடை உத்தரவு ஆரம்பிக்கிறது. சட்டத்தை மீறி வெளியில் சுற்றுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
மதுரை மக்கள் பீதி
மதுரையில் நேற்று ஒருவருக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது. அதில் சிக்கல் என்னவென்றால் தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா தொற்றிய முதல் நபர் இவர்.
அவருக்கு எந்த வித வெளிநாட்டு தொடர்பும் இல்லை என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியுள்ளார். இதனால் மதுரை மக்கள் சற்று பீதி அடைந்துள்ளனர்.