கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரிசர்வ் வங்கியின் சக்தி காந்த தாஸ் அறிவிப்பின் படி கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல் லோன் மூன்று மாதங்களுக்கு கட்டவேண்டுமா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் காரணமாக பிரதமர் மோடி 21 நாள்களுக்கு மக்கள் பெரிய ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
அத்தியாவசிய தேவைக்காக மட்டும் மக்கள் வெளியில் வந்து பொருட்களை வாங்கலாம் .
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறி வரும் நிலையில் இந்தியா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிலும் சுகாதாரத் துறை மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகின்றனர்.
சொந்தத் தொழில் செய்பவர்கள், குறு மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் அன்றாட வேலைக்கு செல்பவர்கள் வங்கியில் கடன் பெற்று இருந்தால்,
அவர்களால் இஎம்ஐ கட்ட முடியாததால் ரிசர்வ் வங்கிக்கு பல தரப்பிடம் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் நேற்று ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் மூன்று மாதங்களுக்கு வங்கியில் வாங்கிய அனைத்து கடன்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டிய தேவை இல்லை.
ஆனால் இந்த மூன்று மாதம்இஎம்ஐயை பிற்காலத்தில் கட்ட வேண்டுமே தவிர, இந்த மூன்று மாதத் தொகையை நீக்கப்படாது.
இதனால் மக்களின் சிபில் ஸ்கோர் பாதிக்கப்படாது, எந்தவித அபராதமும் விதிக்கப்பட்டது என்றும் அறிவித்திருந்தார்.
இவர் அறிவித்தபடி இதில் பர்சனல் கடனும் அடங்கும் ஆனால் கிரெடிட் கார்டு என்பது மக்களின் தனிப்பட்ட முறையில் செலவழிப்பதால் இது வங்கி கடனில் வராது.
ஆகவே கிரெடிட் கார்டில் நமக்கு வந்த பில் தொகையை சரியாக வருகிற மாதம் கட்ட வேண்டும்