Ear piercing festival westbengal : மேற்குவங்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் மிக பழமையான ஒரு பண்டிகையினை, கொரோனாவினை காரணம் காட்டி நடக்க தடைவிதித்துள்ளது மத்திய அரசு.
இந்தியாவின் பல இடங்களில், பல வினோதமான மத ரீதியான பண்டிகைகள் நடப்பது வழக்கமான ஒன்று. இந்த மாதிரியான பண்டிகைகளினாலே பல சுற்றுலா பயணிகளை இந்தியா கவர்ந்து வருகிறது.
அப்படி பலரை கவர்ந்த ஒரு பண்டிகைதான் மேற்குவங்கத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும், இரும்பினால் காதுகுத்திக்கொள்ளும் பண்டிகை ( Ear piercing festival westbengal ).
இந்த பண்டிகை அங்கு நடக்கும் விவசாயம் செழிப்பாக நடக்கவேண்டுமென இறைவனிடம் வேண்டுவதாக கொண்டாடப்படுகிறது என்று அந்தமக்கள் கூறுகின்றனர்.
அந்த நாட்டில் விவசாயம் செய்யும் ஆண்கள், நன்கு சூடேற்றப்பட்ட இரும்பினால் காதுகுத்திக்கொள்வது மற்றும் கன்னத்தில் அல்லது முதுகில் குத்திக்கொள்வது போன்ற பல வித்தியாசமான செயல்கள் அந்த பண்டிகையில் அரங்கேறும்.
இந்த வலிகள் எல்லாம் கொஞ்சம் காலம்தான், எதுவும் நிரந்தரமல்ல எனும் நம்பிக்கை மனதில் ஏற்படவும், இந்த நம்பிக்கையினால் எந்த பிரச்சனையையும் எளிதாக வென்றுவிட முடியும் என்பதே இந்த பண்டிகையின் உள்நோக்கம் என்று அங்கிருக்கும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு கடினமான முறைகளில் இறைவனை வேண்டி வழிபட்டாலும், ஒரு சில ஆண்டுகள் சரியான மழை இல்லாமல் இறைவன் அவர்களை ஏமாற்றிவருகிறான் என்று பலர் மனதில் சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகப்படுவது மட்டுமல்லாமல் பல இளைஞர்கள் அந்த வழிபாட்டினை வெறுக்கவும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
தற்போது கொரோனவை காரணம் காட்டி இப்படிப்பட்ட பழமையான பண்டிகையை நடத்தக்கூடாது என்று மத்திய அரசு தடைசெய்துள்ளது.