கலாபவன் மணி கொலை: உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்
மறைந்த நடிகர் கலாபவன் மணி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
2016 மார்ச் 6-ஆம் தேதி காலக்குடியில் அவரது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தினார். அப்போது திடிரென மரணமடைந்தார்.
முதலில் கல்லீரல் பாதிப்பால் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில் அவர் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டது இறந்தது தெரியவந்தது.
இதனால் அவ்விருந்தில் பங்கேற்ற நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வழக்கு விசாரணையின்போது கலாபவனின் நண்பர்களான ஜாபர் இடுக்கி, சபுமான் உள்ளிட்ட 7 பேரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்னர்.