coronavirus in kerala : நாளை முதல் கேரளாவின் பல மாவட்டங்கள் இயல்புநிலைக்கு திரும்புமென அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த போடப்பட்ட 21 நாள் ஊரடங்கினை மேலும் 19 நாட்கள் நீடித்தது மத்திய அரசு.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா தொற்று முற்றிலுமாக குறைந்துள்ளதால், அந்த மாநிலத்தை திறக்கப்போவதாக அம்மாநில முதலைச்சர் தெரிவித்துள்ளார்.
coronavirus in kerala : ஆரம்பத்தில் இந்தியாவில் அதிக தொற்று எண்ணிக்கை கொண்டிருந்த கேரளா, பல கட்டுப்பாடுகள் விதித்து தொற்று பரவலை வேகமாக கட்டுக்குள் கொண்டுவந்தது.
கேரளாவில் உள்ள மாநிலங்களை சிகப்பு, ஆரஞ்சு A, ஆரஞ்சு B, பச்சை போன்ற வண்ணங்கள் வாரியாக பிரித்து, பல கடுமையான நடவடிக்கைகளின் உதவியால் எளிதில் கொரோனாவினை வென்றுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொரோனாவினை குணப்படுத்த பலவிதமான புதிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் இந்தியாவிலே கேரளாதான் முதலிடம்.
கேரளா அரசின் இந்த துரித நடவடிக்கையினை பலர் பாராட்டியும், கேரளா இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம், அதன் வழிகளையே பின்பற்றுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.