ராமகிருஷ்ணா மடம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு இருந்தவர்களை சந்தித்து குடியுரிமை சட்ட திருத்தத்தைப் பற்றி பேசினார்.
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஞாயிறு அன்று கொல்கத்தா பேலூர் இராமகிருஷ்ணா மடத்தில் தங்கி இருப்பவர்களை சந்தித்து பேசினார்.
அடிமைப்படுத்தியது பாகிஸ்தான்
பிரதமர் மோடி பேசியதாவது, “குடியுரிமை திருத்த சட்டம், மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமே யாருடைய உரிமையும் பறிப்பது அல்ல” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் பற்றி தனது உரையில் மோடி கூறியதாவது, “பாகிஸ்தான், தன் நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் உரிமையைப் பறித்து அவர்களை 70 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வருவதாகவும்” தெரிவித்தார்.
ராமகிருஷ்ணா மடம் விளக்கம்
சுவாமி சுவிரானந்தா செய்தியாளர்களை சந்தித்தபோது, “மோடியின் கருத்துக்களுக்கு நாங்கள் விளக்கம் அளிக்கப் போவதில்லை.
மோடி இந்த நாட்டின் பிரதமர். மம்தா மாநிலத்தின் முதல்வர். நாங்கள் அரசியல் சாரா அமைப்பினர். இல்வாழ்க்கையில் இருந்து விலகி துறவறம் ஏற்றுள்ளோம்.
எனவே, நாங்கள் உலகில் நடைபெறும் தற்காலிக விஷயங்களில் தலையிடமாட்டோம்” எனத் தெரிவித்தார்.
குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது?
2004-ம் ஆண்டின் குடியுரிமை திருத்த சட்டத்தின் படி (அசாம் தவிர) இந்தியாவில் வாழும் தாயோ, தந்தையோ இந்தியராக இருந்து அவர்களுக்கு 1987-ம் ஆண்டிற்கு முன் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்களாகவே கருதப்படுவார்.
அசாம் மட்டும் விதிவிலக்கு. அசாமில் 1971-ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் மட்டுமே இந்தியர்களாக கருத்தப்படுவர் என்பதாகும். இதில் மேலும் சில திருத்தங்கள் கொண்டு வந்தது பாஜக அரசு.
பாகிஸ்தான், ஆப்கானிஷ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்பதே அது.
குடியுரிமை சட்ட எதிர்ப்புகள்
இந்த குடியரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டிசம்பர் 4 2019-ல் இருந்து வடகிழக்கு இந்தியா முழுவதும் பிரச்சனைகள் ஆரம்பம் ஆயிற்று.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் மத்திய அரசு, ஒரே நாளில் மத்தியிலும், மாநிலத்திலும் அனுமதி வாங்கி குடியரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்றது.
முதலில் அசாமில் ஆரம்பித்து மேகாலயா கொல்கத்தா, மும்பை, டெல்லி என வடகிழக்கு இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்தது.
இருப்பினும் மத்திய அரசு குடியரிமை சட்டத்தை திரும்ப பெரும் எண்ணம் இல்லை என்பதை தெளிவாக எடுத்துரைத்தது.
அமித்ஷாவின் அதிரடி பேச்சு
ஜபல்பூர்: இதனிடையே குடியரிமை சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்.
சில மாணவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் இந்தியாவிற்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அவர்கள் சிறையில் அடைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.