மும்பை மாணவனுக்கு கூகிளிடம் கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு என்னவென்று தெரியுமா?
அடிக்கடி ஆன்லைனில் புரோகிராமிங் பற்றி எதவாது தேடிக்கொண்டு இருக்கும் மும்பையை சேர்ந்த அப்துல்லா கான் என்ற மாணவன் கூகிள் நடத்திய கண்டெஸ்ட் ஒன்றில் பங்கேற்று அதில் தேர்வு ஆனார்.
பிறகு அவருக்கு அனுப்பட்ட மெயிலில் நேர்முகத் தேர்வுக்கு லண்டன் வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. லண்டன் சென்று அங்கும் தேர்வு பெற்ற அவருக்கு படிக்கும் பொழுதே கூகிளில் வேலை கிடைத்தது.
இவருக்கு கூகிள் கொடுக்கும் ஆண்டு வருமானம் கேட்டால் வாயடைத்து போவீர்கள், எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 20 லட்சம் அதாவது மாதம் 10 லட்சம் ஆகும்.
பொறியியல் படித்து முடித்துவிட்டு முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை கிடைக்கும் என்று இளைஞர் இளைஞிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், படிக்கும் பொழுதே வேலை கிடைத்த இவருக்குள் இருக்கும் திறமை போல் நாம் அனைவரிடமும் உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
படித்துக்கொண்டிருக்கும்போதே கூகுளில் வேலைக்குச் சேரும் இரண்டாவது மாணவர் இவர் 2018-ம் ஆண்டு ஐ.ஐ.டி-யில் படித்துக் கொண்டிருந்த சினேகா என்னும் மாணவி, 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் ஐ.ஐ.டி-யில் வேலைக்குச் சேர்ந்தார்.
மும்பையைச் சேர்ந்த அப்துலா கான், ஸ்ரீஎல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் பி.இ- கம்யூட்டர் சைன்ஸ் படித்து வருகிறார்.
முதலில் ஐ.ஐ.டி-யில் சேர்வதற்காக நுழைவுத் தேர்வு எழுதி, தோல்வி அடைந்ததால் இந்தப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.