நிர்பயா வழக்கு; என்னடா புதுப்புது ட்விஸ்ட் ஆஹ் வைக்கிறிங்க இந்தியாவையே உலுக்கிய நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு நிறைவேற்றப்படும் நிலையில் இருக்கையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தூக்கு கைதிகளில் ஒருவரான அக்சய் குமாரின் மனைவி நான் என் கணவர் இறந்த பிறகு வாழ விரும்பவில்லை. அதனால் எனக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பின் தூக்கிலிடுங்கள் என மனு அளித்துள்ளார்.
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 20ஆம் தேதி தூக்கு நிறைவேற்றப்படவுள்ளது. நான் விதவை என்ற பட்டத்துடன் வாழ விரும்பவில்லை என அவ்ரங்காபாத் கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் மார்ச் 19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
பல்வேறு வழிகளில் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
அனால் எதுவும் பழிக்கவில்லை. இறுதியில் 20ஆம் தேதி தூக்கு நிறைவேற்றப்படவுள்ளது.