Home Latest News Tamil இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

331
0
நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து அதிக அளவில் பரவி வருகிறது.

இந்தியா: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 23 முதல் இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு துவங்கியதிலிருந்து இதுவரை 3 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் குறித்த வீடியோ நேர்க்காணல் மூலம் பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இடையிலான ஐந்தாவது சுற்று நேர்க்காணல் இதுவாகும்.

இந்தியாவில் கொரோனா தொற்றுகள் மொத்த எண்ணிக்கை 62,939 ஆகா உயர்ந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டன. அறிவிப்பு வெளியானது முதலே கொரோனா எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது.

இந்த நிலையில் நோய் தொற்றை எதிர்த்து போராடுவதற்கான நடைமுறைகள் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் குறித்தும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

நேற்று அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதார செயலாளர்களுடன் வீடியோ மாநாட்டை நடத்தினார்.

பிரதமர் மற்றும் மாநில முதர்வர்களுடனான இந்த 5 வது காணொளி நேர்க்காணல் நாளை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறவுள்ளது என்று பிரதமரின் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை, மார்ச்-20, ஏப்ரல்-2, ஏப்ரல்-11 மற்றும் ஏப்ரல்-27 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய ஊரடங்கிற்கு இடையே காணொளி மூலம் கொரோனா வைரஸ் குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இந்தியாவில் நேற்றுவரையில் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,109 ஆக உயர்ந்துள்ளது. மொத்த நோய் தொற்றுகள் எண்ணிக்கை 62.939 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இந்தியாவில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,277 புதிய கோவிட்-19 வழக்குகள் மற்றும் 127 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இனி வரும் நாட்களில் முக கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் நம் வாழ்வின் அங்கமாகவே இருக்கும் என தனது கடைசி காணொளி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here