குட்டி இந்திராகாந்தி: குடும்பமே கட்சியாக மாறியது!
ஒரு அரசியல் தலைவர் மறைவுக்குப்பின் இன்னொரு தலைவர் உருவாக வேண்டும். அந்த தலைவர் பெரும்பாலும் வாரிசு தலைவர்களாகவே இருப்பர்.
நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியா காந்தி என ஒருவர் மறைவுக்குப்பின்பே அவர்களுடைய வாரிசுகள் கட்சிக்குள் புகுந்தனர்.
தற்பொழுது, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி என அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியில் இடம் பிடித்துவிட்டனர்.
இவர்களின் முன்னோடி திமுக கட்சியே. இந்திய அளவில் அரசியல் புதுமைகளைப் புகுத்தி வந்தது திமுக. அதில் ஒன்று வாரிசு அரசியல்.
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, தயாநிதிமாறன் இப்படி மொத்த குடும்பமுமே அரசியலுக்குள் நுழைந்தனர். அதைத்தான் காங்கிரஸ் பின்பற்றியுள்ளது.
சோனியாகாந்தியின் மகள் பிரியங்கா காந்தி நீண்ட நாட்களாகவே குட்டி இந்திராகாந்தி என அழைக்கப்பட்டு வந்தார். காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் அசோக் இதுகுறித்து கூறியதாவது, “பிரியங்கா காந்தியை உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொதுச்செயலாளராகவும், சிந்தியாவை உத்திரப்பிரதேசத்தின் மேற்குப் பகுதி பொதுச்செயலாளராகவும் ராகுல்காந்தி நியமணம் செய்து உள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.