கரண்ட் பில் 23 கோடி ரூபாய்: அப்துல் பாசித் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாசித். சமீபத்தில் வீட்டுக்கு மின்சாரக்கட்டணம் செலுத்த மின்சாரிய வாரிய அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று பில்லை பார்த்தவருக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. வீட்டு மின்சாரக் கட்டணம் என ரூ.23,67,71,524 இருந்துள்ளது.
என்ன ரெண்டு குண்டு பல்பு, ஒரு டியூப் லைட்டுக்கு 23 கோடி பில்லா என அதிர்ந்துள்ளார் அப்துல் பாசித். வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் இவ்வளவு தொகையை கட்டமுடியாதே எனக் கவலை கொண்டுள்ளார்.
மின்சார வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். ரீடிங் மீட்டரில் பழுது ஏற்பட்டு இருக்கலாம்.
அதனால் தவறான ரீடிங் பதிவாகியிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும், ரீடிங் மீட்டர் சரி செய்யப்பட்டு சரியான கட்டணம் வசூலிக்கப்படும்.
அதுவரை தாங்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர் மின்சாரத் துறை அதிகாரிகள்.
இட்லிக்கும், சட்னிக்கும் கோடி கோடியா பில் போட்ட நம்ம ஊர் கதையவே இது மிஞ்சிவிட்டது.