Home நிகழ்வுகள் உலகம் இந்தோனேசியாவில் கனமழை: 8 பேர் பலி; 2000 பேர் பாதிப்பு

இந்தோனேசியாவில் கனமழை: 8 பேர் பலி; 2000 பேர் பாதிப்பு

0
364
இந்தோனேசியாவில் கனமழை

இந்தோனேசியாவில் கனமழை: 8 பேர் பலி; 2000 பேர் பாதிப்பு. கனமழை காரணமாக இந்தோனேசிய நாடு பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 8-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000 பேருக்கும் மேற்பட்டோர் வசிக்க வீடு இல்லாமல், பாதுகாப்பான இடங்களை நோக்கி குடிபெயர்ந்து உள்ளதாக மீட்புபடை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பில்லி பில்லி என்ற அணை நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே இவ்வளவு பெரிய பாதிப்புக்கு காரணம்.

நள்ளிரவில் இச்சம்பவம் நடந்ததால் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபடமுடியவில்லை.

இந்தோனேசியாவில் பருவ மழை காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதும், நிலச்சரிவு ஏற்படுவது வாடிக்கையே.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here