விஸ்வஹிந்து மகாசபா தலைவர் ரஞ்சித் பச்சன் சுட்டுக்கொலை (Ranjit Bachchan Murder). அதிக அளவு குண்டுகள் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உத்திரப்பிரதேசம் லக்னோவில் அகில்பாரத் இந்துமகாசபாவின் மாநிலத் தலைவர் ரஞ்சித்பச்சன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று காலை 6.30 மணியளவில் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
தலையில் தோட்டா பாய்ந்து இறப்பு
ரஞ்சித் மற்றும் அவரது சகோதரர் ஆதித்யா ஸ்ரீவத்சாவும் நடைப்பயிற்சி சென்றபோது நகரத்தின் பரபரப்பான வணிகப்பகுதியான ஹஸ்ரத்கஞ்சில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டனர்.
இதில் தலையில் அதிக அளவு குண்டுகள் பாய்ந்ததில் ரஞ்சித் பச்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் (Ranjit Bachchan Murder).
லக்னோ போலீஸ் இணை ஆணையர் நவீன் அரோரா கூறுகையில், மர்ம நபர்கள் சுட்டதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஸ்ரீவத்சவா கையில் குண்டு பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது மற்றும் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமாஜ்வாதி பார்ட்டி ரஞ்சித்
ரஞ்சித் பச்சன் ஹிந்து அமைப்பை தொடங்கும் முன் சமாஜ்வாதி கட்சியில் இருந்தார். 2009-ம் ஆண்டு வரை சமாஜ்வாதி கட்சியில் முக்கியப் பதவியிலிருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் நடக்கும் இரண்டாவது கொலை இது. இரண்டாவது விஸ்வஹிந்து மகாசபா தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.