தாஜ் ஹோட்டல் மருத்துவ பணியாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது, மும்பையில் தாஜ் மற்றும் பிற ஹோட்டல்கள் மருத்துவ ஊழியர்கள் தங்குவதற்கு இலவசமாக இடமளிக்கவுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான சொகுசு ஹோட்டலான தாஜ் IHCLக்கு சொந்தமானது. இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட சொகுசு ஹோட்டலும் இது தான்.
கொரோனா இந்தியாவில் தீவிரமடைந்து வரும் நிலையில் மக்களை விட அதிகம் சிரமப்படுவது மருத்துவர்களும் காவலர்களும் தான்.
இதனால் வேலை செய்து விட்டு நீண்ட தூரம் பயணம் செய்து சொந்த வீடுகளுக்கு உகந்த நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.
நாடே ஊரடங்கில் இருப்பதால் போதிய போக்குவரத்து இல்லாத காரணத்தால் இயங்கும் ஓரிரு வாகனங்களும் மிகவும் கூட்டமாக செல்கிறது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் பயமும் அவர்களுக்கு அவர்களின் குடும்பங்களுக்கும் இருக்கிறது. இந்த நேரத்தில் தானாக முன் வந்த சொகுசு ஹோட்டல்கள் இலவசமாக இடமளிக்கிறது.
மும்பையில் இருக்கும் பிரபலமான அனைத்து ஹோட்டல்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து மருத்துவ பணியாளர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.