சமூக வலைத்தளம் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளதாக பகீர் தகவலை ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது,
இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்த முக்கியத்தளமாக, சமூக வலைதளங்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும்.
சமூக வலைதளங்களில், வரலாற்றை திரித்து கூறுதல், நடக்காத ஒன்றை நடைபெற்றதாக கூறுதல், மதங்கள் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன.
இதன் காரணமாகவே காஷ்மீரில் பிரிவினைவாதம் ஒழிக்கமுடியாத சக்தியாக வளர்ந்துள்ளது. எனவே சமூக ஊடங்களுக்கு சென்சார் தேவை.
படித்த இளைஞர்களைக்கூட மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பில் இணைய வைக்கின்றனர்.
பயங்கரவாதத்தை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கும் நாடு இருக்கும் வரை, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. பயங்கரவாதம் இருந்துகொண்டே இருக்கும்.
பலவீனமான நாடு, பலம்வாய்ந்த நாட்டை எதிர்கொள்ள முடியாமல் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றது.
நிபந்தனை ஏதுமின்றி, தாலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான், தாலிபான்கள் பின்னணியில் செயல்படும் நாடு.
இதைக் கவனத்தில் கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும். இவ்வாறு நிகழ்ச்சியில் பிபின் ராவத் பேசினார்