கமலை விஞ்சிய கதிர்: Rs.29 டிக்கெட் விலை, பொங்கல் ரிலீஸ்!
விஸ்வரூபம் டி.டி.எச் ரிலீஸ்
விஸ்வரூபம் படத்தை முதன் முதலில் ஏர்டெல் டி.டி.எச் வழியாக வெளியிட கமல் முயன்றார். ஆனால் திரையரங்கத்தினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
திரையரங்கத்தில் வெளியிடும் நாளிலேயே படத்தை டி.டி.எச்சில் வெளியிட்டால், திரையரங்குகள் நலிவடைந்து பாதிக்கப்படும் என எதிர்ப்புகள் கிளம்பியது.
இதனால், கடைசி நேரத்தில் டி.டி.எச் முடிவைக் கைவிட்டு திரையரங்கில் மட்டுமே படம் வெளியானது.
C2H ரிலீஸ்
அதன்பிறகு, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற திரைப்படத்தை C2H என்ற புதிய நிறுவனத்தை துவங்கி நேரடியாக படத்தை வெளியிட்டார் சேரன்.
இத்திட்டமே தோல்வியில் முடிந்தது. காரணம், படத்தை சி.டி.யில் வெளியிட்டனர். வீடுவீடாக மார்க்கெட்டிங் செய்யும் முறை தோல்வியில் முடிந்தது.
அதன்பிறகு வேறு படங்களை C2H மூலமாக ரிலீஸ் செய்யமுடியவில்லை. அந்த நிறுவனமே கடன் பிரச்சனையால் ஊத்திமூடிடப்பட்டது.
வெப் சீரியஸ் வருகை
ஆன்லைன் ஆப்கள் அதிக அளவு உருவாகின. குறிப்பாக அமேசான், நெட்பிளிக்ஸ் வருகைக்குப்பின் இது அதிகரித்துவிட்டது.
இதில் அதிக அளவில் வெப் சீரியஸ் வெளியாகின. தமிழ் நடிகர்கள் கூட வெப் சீரியலில் நடிக்கத் துவங்கினர்.
நேரடித் திரைப்படம்
தியேட்டர்கள் முறையாக கிடைக்கவில்லை என ஆன்லைனை நோக்கி சிகை திரைப்படம் சென்றுள்ளது.
முதல்முறையாக ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் வெளியாகிறது. ZEE5 இணையதளம் மற்றும் செயலியில் இப்படத்தைக் காணலாம்.
29 அல்லது 49 ரூபாய் கட்டணம் செலுத்தி இப்படத்தைப் பார்க்கலாம். 49 ரூபாய் கட்டணம் என்பது ஒரு மாதம் முழுவதும் வெளியாகும் படங்கள், வெப்சீரியஸ்கள், டி.வி. நிகழ்சிகளைப் பார்பதற்குரிய கட்டணமாகும்.
தமிழ்ராக்கர்ஸ் ஊத்தி மூடப்படுமா?
தியேட்டரில் வெளியாகும் படங்களையே திருட்டுத்தனமாக வெளியிட்டு வரும் தமிழ்ராக்கர்ஸ் இதனால் பாதிக்கப்படுமா?
இல்லை, இந்த தளத்தில் உள்ள படத்தையும் திருட்டுத்தனமாக வெளியிட்டு செழிப்படையுமா? எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.
49 ரூபாய் கூடச் செலுத்தி குடும்பத்துடன் படம் பார்க்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படாதவரை, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களை ஒழிக்க முடியாது என்பதே உண்மை.